பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளைப் பெற்றுக் கொடுக்க எதிர்க்கட்சித் தலைவர் இத்தாலி தூதுவரைச் சந்தித்தார்.



டித்வா சூறாவளி புயலால் ஏற்பட்ட கடுமையான பேரிடர் நிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இத்தாலியக் குடியரசின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக இலங்கைக்கான இத்தாலியத் தூதுவர் டாமியானோ பிராங்கோவிக் (Damiano Francovigh) அவர்களை நேற்று (02) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

தற்போதைய பேரிடர் சூழ்நிலை காரணமாக எழுந்துள்ள பல்வேறு பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் தொடர்பில் இரு தரப்பினரும் இதன்போது கவனம் செலுத்தினர். தற்போதைய பேரிடர் நிலைமை, அதன் பின்னர் ஏற்படக்கூடிய பேரிடருக்குப் பிந்தைய நிலைமை மற்றும் தொற்றுநோய் நிலைமையை கையாள இத்தாலியக் குடியரசால் இந்நேரத்தில் இலங்கைக்குப் பெற்றுத் தர முடியுமான அதிகபட்ச பங்களிப்பைப் பெற்றுத் தருமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது கௌரவமாக கேட்டுக் கொண்டார்.

அத்தியாவசிய சேவைகள் மற்றும் வைத்தியசாலைகளின் சேவைகளைப் பேணிச் செல்வதற்கும், சேதமடைந்த ரயில் போக்குவரத்துப் பாதைகள் மற்றும் வீதிப் போக்குவரத்து கட்மைப்புகளை புனர்நிர்மாணம் செய்வதற்கும் எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது இத்தாலி தூதுவரிடம் உதவி கோரினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :