நிகழ்வுக்கு உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைடீன் விசேட செய்த ஒன்றை அனுப்பி வைத்திருந்தார். அதனை பீடாதிபதி பேராசிரியர் பாஸில் சபையில் வாசித்தார்.
நிகழ்வின் முக்கிய உரையை ஒன்லைன் ஊடாக , அமெரிக்காவின் University of New Haven பல்கலைக்கழகத்தின் , உயிரியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் துறை உதவி பேராசிரியர் ஷெரோன் கஹாரா, உரை நிகழ்த்தினார் உதவி பேராசிரியர் ஷெரோன் கஹாராவை புவியியல் துறை தலைவர் கலாநிதி ஐ.எல்.எம். ஸாஹிர் அறிமுகம் செய்தார். Colloquium செயலாளர் ஏ. எல். ஐயூப் நன்றியுரையாற்றினார்.
பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எம். எம். பாஸில் நிகழ்வின் தலைவராகக் கலந்து கொண்டு உரையாற்ரும் போது;
உலகம் முழுவதும் கல்வி, பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் பல்துறை அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டு நடைபெறுகின்றன என்றும் எடுத்துக்காட்டாக, அமெரிக்கா மற்றும் சீனாவைப் போன்ற உலகின் முன்னணி பொருளாதார சக்திகள் பல்துறை ஆராய்ச்சி மற்றும் புதுமைகளின் மூலம் தொழில்நுட்ப, பொருளாதார, மனிதவள மேம்பாட்டில் முன்னிலை வகித்து வருகின்றன என்றும் தெரிவித்தார்..
“இன்றைய உலகம் ஒரு போட்டி உலகமாக மாறியுள்ளது. அதில் முன்னேறுவதற்கு பல்துறை சார்ந்த அறிவு மற்றும் செயற்பாடுகள் தேவை. மனிதவியல், சமூக அறிவியல் மற்றும் இயற்கை அறிவியல் ஒன்றிணைந்தால் தான் புதிய அறிவு உருவாகும்,” என தெரிவித்தார்.
“உலக மக்கள்தொகை 8.2 பில்லியனில், சுமார் 1.8 பில்லியன் பேர் இளைஞர்கள் ஆவர். இலங்கையின் மக்கள்தொகையில் 23 சதவீதம் இளைஞர்கள். எனவே, நாட்டின் நிலைபேறானதன்மை மற்றும் வளர்ச்சிக்காக இளைஞர்களை பல்துறைகள் சார்ந்த செயற்பாடுகளில் ஈடுபடுத்துவது அவசியம்,”எனவும் தெரிவித்தார். அத்துடன் இளைஞர்களின் ஆராய்ச்சி திறனை மேம்படுத்த பல்கலைக்கழகங்கள் மற்றும் பீடங்கள் சிறந்த தளமாக திகழ வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகள் மற்றும் பல்வேறு சர்வதேச அமைப்புகள் வலியுறுத்தும் Sustainable Development Goals (SDGs) இலக்குகளை அடைய கல்வி நிறுவனங்கள் முக்கிய பங்காற்ற வேண்டும் என சுட்டிக்காட்டினார். பல்துறை சார்ந்த செயற்பாடுகள் மற்றும் நிலைபேறானதன்மை என்ற இரு அம்சங்களும் இன்றைய மாநாட்டின் மைய நோக்கங்களாக இருப்பதாகவும், இத்திட்டம் மூலம் மாணவர்களின் சிந்தனைத் திறனும் ஆராய்ச்சி திறனும் மேம்படும் எனவும் கூறினார்.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கலாசார பீடம் சர்வதேச அளவில் தொடர்புகளை வலுப்படுத்தி வருவதாகவும், அமெரிக்காவின் University of New Haven பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியர் கலாநிதி ஷரோன் கஹாரா அவர்களின் பங்கேற்பு அதற்கான சிறந்த எடுத்துக்காட்டாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
“இந்தப் பீடம் பல்துறை ஆராய்ச்சியில் முன்னோடியாக திகழ்கிறது. பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்திலிருந்தும் விருந்தினர் பேராசிரியர்கள் வருகை தந்துள்ளனர். இதுவே கலை மற்றும் கலாச்சார பீடத்தின் அறிவியல் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான உறுதியின் அடையாளம்,”எனவும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வை வெற்றிகரமாக ஒருங்கிணைத்த புவியியல் துறை முன்னாள் தலைவரும் நிகழ்வின் ஒருங்கிணைப்பாளருமான கே. நிஜாமிர், புதிய தலைவர் கலாநிதி சாஹிர், செயலாளர் ஏ. எல். ஐயூப், இளம் கல்வியாளர்கள் நுஸ்கியா மற்றும் நுஸ்கா ஆகியோரின் அர்ப்பணிப்பை பேராசிரியர் பாஸில் பாராட்டினார்.
மேலும், முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எம். ஐ. எம். கலீல், சிரேஷ்ட விரிவுரையாளர்கள் எம். எல். பௌஸுல் அமீர், கலாநிதி ரஃபிகா, மற்றும் றினோஸ் ஆகியோரின் பங்களிப்பையும் அவர் நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.
நிகழ்வில் பீடாதிபதிகளான பேராசிரியர்களான ஏ.எம்.எம். முஸ்தபா, கலாநிதி யூ.எல் மஜீத், பதில் பீடாதிபதி பேராசிரியர் எஸ்.எம்.எம். நபீஸ் மற்றும் சிரேஷ்ட பேராசிரியர் கலாநிதி எம்.எ.எம். றமீஸ், சிரேஷ்ட பேராசிரியர் கலாநிதி எம். ஐ. எம். கலீல், பேராசிரியர் கலாநிதி ஏ.எல்.எம்.றியால், பேராசிரியர் ஏ.எம்.எம். நவாஸ், பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஐயூப், பேராசிரியர் கலாநிதி ஏ.ஏ. எம். நுபைல் கலாநிதி எம். அப்துல் ஜப்பார், கலாநிதி சி.எம். மன்சூர் கலாநிதி எம்.ஐ.எவ். கரீமா மூத்த விரிவுரையாளர் எம்.ஏ.எம். சமீம், காநிதி ஏ. டபிள்யூ. என். நளீபா, கலாநிதி எஸ். அனுசியா, கலாநிதி ஏ.சி. ஹனஸ், சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.அப்துல் றஸ்ஸாக், எம்.என். நுஸ்காபானு, எம்.எச். பாத்திமா நுஸ்கியா, என். சுபராஜ், சிரேஷ்ட உதவிப் பதிவாளர் எம்.ரீ. அஹமட் அஷ்ஹர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
.jpg)

0 comments :
Post a Comment