ஏழாம் வானத்தின் சிறகுகள்” கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா



சிரேஷ்ட ஊடகவியலாளர் சித்தீக் காரியப்பரின் பாரியார் பாத்திமா நளீரா எழுதிய “ஏழாம் வானத்தின் சிறகுகள்” கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா கடந்த (12) ஆம் திகதி கொழும்பு தபால் திணைக்கள கேட்போர் கூடத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

மூத்த பத்திரிகையாளரும் தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியருமான வீரகத்தி தனபாலசிங்கம் இந்நிகழ்வுக்கு தலைமை வகித்தார்.

விழாவின் பிரதம அதிதியாக உயர்நீதிமன்ற நீதியரசர் ஏ. எச். எம். டி. நவாஸ் கலந்து கொண்டு நூலின் முதல் பிரதியைப் பெற்று, தனது வாழ்த்துரையையும் நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கலந்து சிறப்பித்ததுடன், நூலினை விமர்சன உரையும் நிகழ்த்தினார். அதேபோன்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் அவர்களும் உரையாற்றினார்.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். நிசாம் காரியப்பர் கலந்து கொண்டு நூல் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.

கருத்துரை வழங்கியவர் கவிமனி அல் அஸூமத், கவி வாழ்த்துரை நாகபூஷணி கருப்பையா, கவிஞர்கள் ரவூப் ஹஸீர் மற்றும் என். நஜ்முல் ஹுசைன் ஆகியோர் தங்களது இலக்கிய உரைகளால் நிகழ்வை சிறப்பித்தனர்.
ஏற்புரை புர்கான் பீ இப்திகார் வழங்கினார்.
நிகழ்ச்சித் தொகுப்பை அஹமட் எம். நஸீர் திறம்பட மேற்கொண்டார்.

மேலும், உலக அறிவிப்பாளர் பீ.எச். அப்துல் ஹமீத், ஜே.ஜே. பவுண்டேசன் நிறுவனர் பணிப்பாளர் கலாநிதி அல்ஹாஜ் ஐ. வை. எம். ஹனீப் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் சகல ஏற்பாடுகளையும் சிரேஷ்ட ஊடகவியலாளர் சித்தீக் காரியப்பர் மற்றும் அவரது மகன் முஹம்மத் ஷிபான் காரியப்பர் இணைந்து சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.

பத்திரிகை ஆசிரியர்கள், சிரேஷ்ட ஊடகவியலாளர்கள், இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் பாத்திமா நளீராவின் கவிதைத் தொகுப்பினைப் பெற்று சென்றமை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது.






















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :