இந்நிகழ்வுக்கு ஹாஷிம் உமர் பௌண்டேசனின் ஸ்தாபகர் புரவலர் ஹாஷிம் உமர் தலைமையாற்றினார்.
நிகழ்வின் பிரதம அதிதியாக கொழும்பு மாநகர சபை உறுப்பினர் எ. பி. செல்வம் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
அத்துடன், சுயாதீன தொலைக்காட்சி தமிழ் பிரிவு செய்தி முகாமையாளர் சித்தீக் ஹனீபா, தமிழன் பத்திரிகை செய்தி ஆசிரியர் ஏ. எம். ஜவ்பர், ஒருங்கிணைப்பாளர் ஆகிப் மொஹமட், கொழும்பு மாநகர சபை உறுப்பினர் எம். ஐ. எம். சித்தீக், அமைப்பின் பணிப்பாளர் மரியம், ஊடகவியலாளர்கள் சியாவுல் ஹஸன், கஜமுகன், பெற்றோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
இந்த வாய்ப்பில் ஜே. திலுக் ஷான் (எட்டியாந்தோட்டை), குகதாசன் துஷ்யந்தனி (யாழ்ப்பாணம்), எஸ். மன்ஷா (கலேவல), எம். ரிபானா (மொனராகலை) மற்றும் ஏ. ஜே. எப். முபஷ்ஷரா (கஹட்டோவிட்ட) ஆகிய மாணவர்கள் புரவலர் ஹாஷிம் உமர் அவர்களிடமிருந்து மடி கணினிகளைப் பெற்றுக்கொண்டனர்.





.jpg)










0 comments :
Post a Comment