கல்முனை ஸாஹிறா கல்லூரி (தேசிய பாடசாலை)யில் தரம் 12 கணிதப் பிரிவில் கல்வி கற்கும் சிரேஸ்ட சாரண மாணவன் என். முஹம்மட் ஷஹீம் நாஜிஹ், இலங்கை சாரணர் சங்கத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி சாரணர் விருதிற்கான சமூகசேவை செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக, காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட காரைதீவு கண்ணகி இந்து வித்தியாலயத்திற்கு முன் நீண்டகாலமாக சிதைவடைந்த நிலையில் கவனிப்பாரற்றுக் கிடந்த பஸ்தரிப்பு நிலையத்தை (Bus Halt) புதுப்பித்து புனர்நிர்மாணம் செய்தார்.
மாணவரின் சமூகநலப்பணியின் நிறைவாக, புதுப்பிக்கப்பட்ட பஸ்தரிப்பு நிலையம் 2025 செப்டெம்பர் 30 ஆம் திகதி காரைதீவு பிரதேச சபை தவிசாளர் எஸ். பாஸ்கரனிடம் சம்பிரதாய பூர்வமாக கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அக்கரைப்பற்று – கல்முனை சாரணர் சங்கத்தின் உதவி மாவட்ட ஆணையாளர் ஐ.எல். முஹம்மட் இப்றாஹீம், காரைதீவு கண்ணகி இந்து வித்தியாலய அதிபர் ஏஸ். திருக்குமார், சாரணர் தேசிய பயிற்சிக்குழு உறுப்பினர் கே.எம். தமீம், மற்றும் பல சிரேஸ்ட, கனிஷ்ட சாரண மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த சமூகசேவைச் செயற்திட்டம் கல்வி மற்றும் சாரணச் செயற்பாடுகளுடன் இணைந்து சமூக முன்னேற்றத்திற்கும், இனங்களிடையேயான சகவாழ்வும் நல்லுறவும் பேணப்படுவதற்குமான சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது.
இச்செயற்பாடு ஜனாதிபதி சாரணர் விருதுக்கான சான்றாக மட்டுமல்லாமல், இளைஞர்களின் சமூகப் பொறுப்புணர்வையும் மனித நேய பண்புகளையும் வெளிப்படுத்தும் சிறப்புப் பணி என சாரணர் அதிகாரிகள் பாராட்டினார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment