சாய்ந்தமருது ஒஸ்மன் வீதிக்கான காபட் இடும் பணிகள் ஆதம்பாவா எம்.பி.யினால் ஆரம்பித்து வைப்பு



எம்.எஸ்.எம்.ஸாகிர்-
ரசாங்கத்தின் கிராமிய வீதி அபிவிருத்தி திட்டம் - 2025 இன் கீழ் சாய்ந்தமருது “ஒஸ்மன்” வீதிக்கான காபட் இடும் பணிகள் அம்பாரை மாவட்ட கரையோர பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவாவின் வேண்டுகோளின் பேரில் நேற்று (04) வியாழக்கிழமை வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இவ்வீதியானது 6.7 மில்லியன் ரூபாய் செலவில் 500 மீற்றர் நீளம் கொண்ட காபட் பாதையாக, செப்பனிடப்பட இருக்கின்றது.

இவ்வேலைத்திட்டத்தை அம்பாரை மாவட்ட கரையோர பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிராந்திய நிறைவேற்றுப் பொறியியலாளர் எம்.எம்.எம். முனாஸ் மற்றும் அதன் உத்தியோகத்தர்கள், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளர் எஸ்.எம். ஆரிப் ஆசிரியர் உட்பட பிரதேச செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :