மாவடிப்பள்ளி கமு/கமு/ அல்- அஷ்ரப் மகா வித்தியாலய மாணவர்களுக்கு பரிசளிப்பு !



நூருல் ஹுதா உமர்-
ல்முனை கல்வி வலய மாவடிப்பள்ளி கமு/கமு/ அல்- அஷ்ரப் மகா வித்தியாலய மாணவர்களின் பரிசளிப்பு நிகழ்வு இன்று காலை பாடசாலை கூட்ட மண்டபத்தில் அதிபர் ஏ.எல்.ரஜாப்தீன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மயோன் குழும நிறுவனத்தின் பணிப்பாளரும், மயோன் சமூக சேவை அமைப்பின் தலைவரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளருமான எம். றிஸ்லி முஸ்தபா பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இதன்போது தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்த மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டத்துடன் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களும் மயோன் சமூக சேவைகள் அமைப்பின் இலச்சினை பொறிக்கப்பட்ட பாடசாலை பை, அப்பியாச கொப்பிகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் இந்நிகழ்வில் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம்.ஹில்மி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஊடக இணைப்பாளர் எம்.எம்.சாஜீத், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் காரைதீவு பிரதேச ஒருங்கிணைப்பாளர் அஹமட் ஜெமீல், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :