தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தொழில் முன்னேற்ற செயலமர்வு!



தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பவியல் பீட கூட்ட மண்டபத்தில், 2025.08.12 ஆம் திகதி “உங்கள் தொழில்முறை பிராண்டை உருவாக்குவது: CV, LinkedIn & தொழில் வலையமைப்பு மூலம் வெற்றியடைவது”( "Building Your Professional Brand: CV, LinkedIn & Networking for Career Success") என்ற தொனிப்பொருளில் சிறப்பு தொழில் முன்னேற்ற செயலமர்வு ஒன்று இடம்பெற்றது.

இப் செயலமர்வில், Achievers Lanka Business School நிறுவனத்தின் செயற்பாடுகள் மற்றும் வணிக மேம்பாட்டுத் தலைவர், மற்றும் RADTS Ceylon நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியுமான லஹிரு கருணாரத்ன, மற்றும் Achievers Lanka Business School நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக பணிப்பாளர் அஸாத் ஹய் ஆகியோர் சிறப்பு வளவாளர்களாக பங்கேற்று, தங்களின் அனுபவங்களையும் திறன்களையும் மாணவர்கள் எதிர்கால தொழில் சந்தைக்கு தங்களை எவ்வாறு தயார்படுத்தலாம் என்ற வழிகாட்டுதல்களையும் வழங்கினர்.

இந்நிகழ்வு, மாணவர்கள் தங்களின் தொழில்முறை தனித்துவத்தை உருவாக்கி, தற்போதைய போட்டி நிறைந்த வேலைவாய்ப்பு சந்தையில் தங்களை சிறப்பாக வெளிப்படுத்தும் வகையில், தேவையான கருவிகள், யுக்திகள் மற்றும் நடைமுறை வழிகாட்டுதல்களை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக CV தயாரித்தல், LinkedIn ப்ரொஃபைலை மேம்படுத்தல், மற்றும் தொழில்வாய்ப்பு வலையமைப்பை உருவாக்குதல் போன்ற முக்கிய அம்சங்கள் விரிவாக எடுத்துரைக்கப்பட்டன.

முகாமைத்துவ வர்த்தக பீட மாணவர்களில் பெரும்பான்மையானவர்கள் நிகழ்வில் பங்கு கொண்டிருந்தனர்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் ஏ.எம்.எம். முஸ்தபா மற்றும் கணக்கியல் மற்றும் நிதி துறையின் தலைவர் எம்.ஏ.சி.என். ஷாபானா ஆகியோரும் வழிகாட்டுதலில் இடம்பெற்ற இப் பயிற்சி பட்டறையை கணக்கியல் மற்றும் நிதி துறை ஏற்பாடு செய்திருந்தது. இத்துறையின் பாட விரிவுரையாளர் பாத்திமா தபானி ரஷீத் நிகழ்வை ஒருங்கிணைத்திருந்தார்.

நிகழ்வின்போது பேராசிரியர் கலாநிதி ஏ.ஜௌபர் மற்றும் விரிவுரையாளர்களான கலாநிதி எம்.ஐ.எம்.றியாத் மற்றும் எம்.பர்விஷ் உள்ளிட்ட பலரும் பங்கு கொண்டிருந்தனர்.


























இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :