கட்சியின் முடிவுக்கு மாற்றமாக செயற்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – தாஹிர் எம்.பி.



நூருல் ஹுதா உமர்-
டைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக நாடளாவிய ரீதியில் தெரிவாகிய உறுப்பினர்களின் சத்தியப் பிரமாண நிகழ்வு நேற்று முன்தினம்  (11) திருகோணமலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் உரையாற்றிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹிர், “கட்சியின் முடிவுகளை மீறி செயற்படுபவர்கள் மீது கட்சி சட்ட நடவடிக்கை எடுக்கும். அதன் அதிகாரம் கட்சியின் செயலாளரிடம் உள்ளது,” எனக் கூறினார்.

மேலும், தேர்தலில் வெற்றி பெற்ற 140 உறுப்பினர்களும் கட்சியின் கொள்கைகளோடு ஒத்துழைத்து செயற்பட வேண்டும் என வலியுறுத்திய அவர், “இது கட்சியின் உயர்மட்ட தீர்மானத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவாகும். எந்தவொரு பாகுபாடும் இல்லாமல், கட்சி ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்,” என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :