பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் மறைவிற்கு இலங்கை சர்வமத தலைவர்கள் இரங்கல் பதிவு



எம்.எஸ்.எம்.ஸாகிர்-
பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் முகமாக, தேசிய சர்வ மத குரு ஐக்கியத்தின் பிரதிநிதிகளான கெளரவ சாஸ்த்ரபதி கலாநிதி கலகம தம்மரன்ஸி நாயக தேரர், சிவ ஸ்ரீ கலாநிதி பாபுசர்ம் குருக்கள், அல்-ஹாஜ் அஷ்-ஸெய்யித் கலாநிதி ஹஸன் மெளலானா அல்-காதிரி மற்றும் கலாநிதி நிஷான் சம்பத் குரே பாதிரியார் உட்பட சர்வமத தலைவர்கள், கொழும்பிலுள்ள இலங்கைக்கான வத்திக்கான் தூதரகத்திற்குச் சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த இரங்கல் புத்தகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (25) தமது இரங்கலைப் பதிவு செய்தனர்.

இதன்போது சர்வமத தலைவர்கள் தமது இரங்கல் கடிதத்தை வத்திக்கான் தூதரகத்தின் பேராயர் Bபிரைய்ன் உடைய்க்வே அவர்களின் செயலாள‌ர் கெளரவ லக்ஷ்மன் பெர்ணார்ன்டோ பாதிரியாரிடம் கையளித்தும் குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :