நுவரெலியா மாவட்டத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்த தேசிய மக்கள் சக்தி



க.கிஷாந்தன்-
டைபெறவுள்ள 2025 ஆம் ஆண்டு உள்ளுராட்சி மன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தேசிய மக்கள் சக்தி (20.03.2025) இன்று காலை நுவரெலியா மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 01 மாநகர சபை, 02 நகர சபைகள் மற்றும் 08 பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்களை நுவரெலியா மாவட்ட தேர்தல் அதிகாரி திருமதி துஷாரி தென்னகோன் முன்னிலையில் கையளித்தனர்.

தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர ஆராய்ச்சி மற்றும் உயர் கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன உள்ளிட்ட பலர் மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தனர் என்பது குறிப்பிடதக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :