உடலில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் சிறுத்தையின் சடலம் மீட்பு



க.கிஷாந்தன்-
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை மேபீல்ட் தோட்டத்தில் நேற்று (09) மதியம் உடலில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் சிறுத்தையின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக நல்லதண்ணி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

உயிரிழந்த இந்த பெண் சிறுத்தைக்கு சுமார் 3 வயது இருக்கும் எனவும், தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அந்த காயம் வாகனத்தில் மோதியதாலோ அல்லது யாரோ ஒருவர் தாக்கியதாலோ ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

மேபீல்ட் தோட்டத்தின் தேயிலை மலையில் உயிரிழந்த நிலையில் சிறுத்தையின் சடலம் இருப்பதாக திம்புள்ள பத்தனை பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும், அட்டன் நீதவானின் உத்தரவின் பேரில் சிறுத்தையின் சடலம் ரந்தெனிகல வனவிலங்கு கால்நடை வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்படும் என்றும் வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :