நேற்று வரிப்பத்தான்சேனையில் ஷலபி அரபிக் கல்லூரி மீண்டும் ஆரம்பம் !



வி.ரி.சகாதேவராஜா-
றக்காமம் வரிப்பத்தான்சேனை ஷலபி அரபிக் கல்லூரி பல வருடங்களுக்கு பிற்பாடு மீண்டும் நேற்று (5) புதன்கிழமை ஆரம்பமாகியுள்ளது.

மீள ஆரம்பிக்கும் பாரிய நிகழ்வு அரபிக் கல்லூரி தலைவர் அஷ்ஷேக் ஏ. எம் .கியாஸ் மௌலவி தலைமையில் அறபுக் கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது .
பிரதம அதிதியாக இறக்காமம் பிரதேச செயலாளர் எம்எஸ்எம்.றஷான் நளிமி கலந்து சிறப்பித்தார் .
பிரதான சிறப்பு பேச்சாளராக மருதமுனை தாருல் ஹுதா முஸ்லிம் மகளிர் கல்லூரி பணிப்பாளர் அஷ்ஷேக் டாக்டர் எம். எல். முபாரக் மதனி கலந்து கொண்டு உரையாற்றினார் .
மேலும் பல அதிதிகள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

1987 ஆம் ஆண்டு ஷலபி அறபுக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட பொழுதிலும் இடை நடுவில் ஒரு தொய்வுநிலை அடைந்திருந்தது.

இப்பொழுது மீண்டும் இந்த கல்லூரி இயங்க ஆரம்பித்திருக்கின்றது குறிப்பிடத்தக்கது.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :