இந்நிகழ்வுக்கு பொலன்னறுவை மாவட்ட சிரேஷ்ட நீர்ப்பாசன பொறியியலாளர் எம்.எஸ்.எம். நவாஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார். கௌரவ அதிதிகளாக என்ஜினியரிங் கன்சல்டன்சியின் நிறைவேற்று பணிப்பாளர் எம்.யூ.எஸ். நியாஸ் மற்றும் வுரவ்ன் வூட் றசிடன்ஸ் உரிமையாளர் எம்.எச். முகம்மட் நாசர் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
நிகழ்வுக்கு விஷேட அதிதிகளாக கேபிடல் எவ்.எம். சிரேஷ்ட முகாமையாளர் ஏ.எல்.ஜாபீர், பிறை எவ்.எம். ஏ.ஆர்.எம். நௌபீல், EXMPS மற்றும் UOPSF ஆகியவற்றின் நிறைவேற்று பணிப்பாளர் ஏ.ஜி. இக்பால் மற்றும் சாய்ந்தமருது சமூக சேவை உத்தியோகத்தர் ஏ.ஆர். ரோஸ்மி மற்றும் எம்.யூ.எஸ். நிஜாம் ஆகியோர் பங்கு கொண்டிருந்தனர்.
மாணவர்களின் ஆடல் பாடல் என களைகட்டிய நிகழ்வில் தேவையுடைய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
நிகழ்வின்போது அமைப்பின் அங்கத்தினர்கள் மற்றும் நிகழ்வுக்கு அழைக்கப்பட்டார்களால் மண்டபம் நிறைந்திருந்தது.
0 comments :
Post a Comment