இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினரும், அரசியல் அமைப்பு பேரவை உறுப்பினருமான, அம்பாரை மாவட்ட கரையோர பிரதேசங்களின் அபிவிருத்திக்குழு தலைவர் ஏ.ஆதம்பாவா கலந்து கொண்டார். மேலும், கௌரவ அதிதியாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செய்யத் அலிஸாஹிர் மௌலானா கலந்து கொண்டு ஏ.ஆர்.எம். ஜிப்ரி அவர்களின் ஊடக, சமூக, கல்வி, அரசியல் செயற்பாடுகள், சேவைகள் தொடர்பில் இங்கு நினைவுரை நிகழ்த்தினர்.
மேலும் சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு செயலாளர் ஜே. லியாக்கத் அலி, கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கே.எம்.ஏ. ரஸாக், கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹ்துல் நஜீம், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஸிக், மன்னார் பொது வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் அஸாத் எம். ஹனீபா, அம்பாறை பிரதம பொறியியலாளர் ஏ.எம். சாஹீர், பிறை வானொலி பிரதிப் பணிப்பாளர் பஷீர் அப்துல் கையூம், சிரேஷ்ட ஒலி /ஒளிபரப்பாளர் சட்டத்தரணி ஏ.எம். தாஜ் உட்பட அரசியல் பிரதிநிதிகள், கல்விமான்கள், ஊடக ஆளுமைகள், இலக்கியவாதிகள், ஊடக அமைப்புக்களின் பிரதானிகள், மர்ஹூம் அல்ஹாஜ் ஏ.ஆர்.எம். ஜிப்ரி அவர்களின் குடும்பத்தினர் என பலரும் கலந்து கொண்டனர்.
ஊடக மற்றும் இலக்கிய அதிதிகள் பலரும் சிரேஷ்ட ஒலி /ஒளிபரப்பாளர் அறிவுக்களஞ்சியப் புகழ் அதிபர் மர்ஹூம் அல்ஹாஜ் ஏ.ஆர்.எம். ஜிப்ரி அவர்களின் ஊடக, சமூக, கல்வி, அரசியல் செயற்பாடுகள், சேவைகள் தொடர்பில் இங்கு நினைவுரை நிகழ்த்தினர்.
0 comments :
Post a Comment