அபு அலா-
அன்மைக்காலமாக எதிர்நோக்கி வரும் சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட திடீர் அனர்த்த நிலமைகள் குறித்து ஆராய்வதற்கான நிந்தவூர் பிரதேச அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புக் குழு நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி அப்துல் லதீபின் ஏற்பாட்டில் (29) ஒன்றுகூடியது.
இதில் திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர்களான அஷ்ரப் தாஹிர், ஏ.ஆதம்பாவா, எம்.எஸ்.உதுமா லெவ்வை, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பனிப்பாளர் எம்.ஏ.சி.எம்.றியாஸ் உள்ளிட்ட பிரதேச சபை செயலாளர், சுகாதார வைத்திய அதிகாரி, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கிராம சேவை உத்தியோகத்தர்கள், அபவிருத்தி உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
அனர்த்தம் வந்தபோது கடுமையான பாதிப்புகள் எமது பிராந்தியத்தில் ஏற்பட்டமைக்கான காரணங்கள் என்ன? அதற்கு முன்னாயத்த திட்டங்களாக எதை முன்னெடுத்தார்கள் என்பது குறித்து இந்த கூடலில் விரிவாக ஆராயப்பட்டது.
குடியிருப்பு கானிகளைவிட வீதிகள் உயரமாக அமைக்கப்பட்டிருப்பதே வெள்ளநீர் வழிந்தோடாமைக்கான மிக முக்கிய காரணமாகவும், வடிகால்கள் துப்பரவு செய்யப்படாமல் காணப்பட்டதும் இன்னுமொரு காரணமாக இருந்தது என்று கிராம சேவையாளர்களினால் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
விவசாயிகளின் வயல்கானி அழிவுகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதார பாதிப்புக்கள் குறித்தும் அவற்றுக்கான நஷ்ட ஈடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் கருத்துத் தெரிவிக்கையில்.
நாட்டின் பொருளாதார மேம்பாடுகளை பொறுத்தே இவ்வரசாங்கத்தின் அபவிருத்தித் திட்டங்கள் அமையும் என்றும், கடந்தகால ஆட்சியாளர்கள் மீது மக்கள் கொண்ட வெறுப்பின் காரணமாகவே, மாற்றம் ஒன்றை வேண்டி இந்த அரசாங்கத்திற்கு அதிகமான வாக்குகளை மக்கள் வழங்கியிருக்கின்றார்கள் என்று குறிப்பிட்டார்.
மேலும், இந்த ஆட்சியில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றுமையுடன் செயற்படுவதை அறிய முடிகின்றது. அதேபோன்று அரச அதிகாரிகளும் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி சிக்கனமான முறையில் செயற்திட்டங்களை முன்னெடுப்பதற்கு உதவி வழங்கினால் மாத்திரமே ஊழலற்ற ஆட்சியினை முன்னெடுக்க முடியுமென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
0 comments :
Post a Comment