இலங்கை தமிழரசுக் கட்சியானது இம்முறை பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் எங்களுடைய பிரதிநிதித்துவத்தை பெறுவதற்காக பொதுச் சின்னத்தில் போட்டியிடுவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் கட்சியின் காரைதீவுக்கிளை கூட்டமானது பிரதேசக்கிளைத் தலைவர் முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் நடைபெற்றபோது மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில் கட்சிக்கிளையின் தலைவர் செயலாளர் பொருளாளர் ஒவ்வொரு வட்டார பிரதிநிதிகள் வட்டார அங்கத்தவர்கள் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் என பல கலந்து கொண்டிருந்தார்கள்.
ஏக மனதாக இம்முறை தேர்தலிலே அம்பாறை மாவட்டத்தில் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற ஒரு பொதுச் சின்னத்தில் போட்டியிட வேண்டுமென்று அம்பாறை பொதுமக்களினால் சமூக வலைதளங்களிலும் புத்திதீஜீவிகளையும் கலந்துரையாடி வருவதை வருவதை அவதானித்து வருகிறோம்.
நாமும் அதற்காக தயாராக இருக்கின்றோம்.
அதேவேளை அதன் போது ஏனைய கட்சிகள் அம்பாறை மாவட்டத்தில் பிரதிநிதித்துவத்தை எடுப்பதற்காக போட்டியிடுமாக இருந்தால் இலங்கை தமிழரசுக்கட்சி சார்பாக நாங்களும் போட்டியிட நேரிடும் என்பதையும் அம்பாறை மாவட்ட பொதுச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று கருத்து கூறுகின்ற புத்திஜீவிகளுக்கு பகிரங்கமாக இன்றைய ஏகமனதான முடிவை அறிவிக்கின்றோம்.
0 comments :
Post a Comment