முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்ட உத்தேச மறுசீரமைப்பு தொடர்பான புலமைசார் செயலமர்வும், சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பின் வெளியீட்டு விழவும் தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழி பீடத்தின் ஏற்பாட்டில் பீடத்தின் பீடாதிபதி சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்செய்க் எம்.எச்.ஏ. முனாஸ் தலைமையில் 2024.09.29 ஆம் திகதி பீட கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பதில் உபவேந்தர் கலாநிதி யூ.எல்.அப்துல் மஜீட் கலந்து கொண்டார்.
வெளியிடப்பட்ட புத்தகம் தொடர்பான விமர்சன உரையை கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தின் பேராசிரியர் ஏ. சர்வேஸ்வரன் நிகழ்த்தினார்.
நிகழ்வின் கௌரவ அதிதியாக கஹடோவிட்ட அல் ஹிமா இஸ்லாமிக் நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்செய்க் எம்.ஏ.ஏ. நூறுல்லாஹ் (நளீமி) கலந்து கொண்டதுடன் நிகழ்வுக்கான அனுசரணையையும் வழங்கியிருந்தனர்.
நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில், சிரேஷ்ட பேராசிரியர் எம்.ஐ.எம். கலில், பேராசிரியர் எஸ்.எம். ஐயூப் மற்றும் பல்கலைக்கழக திணைக்களங்களின் தலைவர்கள், விரிவுரையாளர்கள் சிரேஷ்ட உதவி பதிவாளர் எம்.எச் நபார், மார்க்க பெரியார்கள், சட்டத்தரணிகள், காதி நீதவான்கள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment