இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பதில் உபவேந்தரும் தொழில்நுட்பவியல் பீடத்தின் பீடாதிபதியுமான கலாநிதி யூ.எல். அப்துல் மஜீட் கலந்து கொண்டு உரையாற்றினார்.
நிகழ்வில் அறிமுக உரைகளை உயிரியல் அமைப்பு தொழில்நுட்பவியல் துறையின் தலைவர் கலாநிதி எம்.எம்.எம். முனீப் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பவியல் துறையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் ஆர்.கே.ஏ. றிபாய் காரியப்பர் ஆகியோர் ஆற்றினர்.
தென்கிழக்கு பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீடத்துக்கு 2022/2023 ஆம் கல்வி ஆண்டுக்கு, 200 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
நிகழ்வின் இணைப்பாளர் விரிவுரையாளர் எம்.வி. பாத்திமா ஜெம்சியாவின் வழிகாட்டலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் ஏ.எம்.எம். முஸ்தபா பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர்,பல்கலைக்கழக திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் குறித்த நிகழ்வில் தொழில்நுட்பவியல் பீடம் கடந்துவந்த பாதை என்ற விவரண காட்சிகளும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
0 comments :
Post a Comment