இலங்கை பாடசாலை சதுரங்க சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாணத்திற்கான சதுரங்க போட்டி திருகோணமலை சிங்கள மகா வித்தியாலயத்தில் கடந்த 18 ஆம் திகதி நடைபெற்றது.
இப்போட்டியில் ஆண்களுக்கான 20 வயது பிரிவில் கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி மாணவன் எம்.ஏ.தமீம் சம்பியனாகவும், ஆண்களுக்கான 17 வயது பிரிவில் எம்.இசட்.எம்.சனீப் சம்பியனாகவும் அதே பிரிவில் ஏ.எஸ்.ஏ.மிஜ்வாத் இரண்டாம் நிலையையும் , ஆண்களுக்கான 15வயது பிரிவில் ஏ.அர்ஹம் பரவீஸ் இரண்டாம் நிலையையும் பெற்றுக் கொண்டதோடு எம்.ஜே.ஐ.சஹ்மி, எம்.என்.எம்.நிசாத், ஏ.ஏ.அனூப் மற்றும் டீ.ஏ.செய்மி ஆகிய மாணவர்களும் தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகினர்.
மேற்படி போட்டியில் வெற்றி பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவான மாணவர்களுக்கும் , போட்டிக்கு மாணவர்களுக்கு பயிற்சியளித்து அழைத்துச் சென்ற சதுரங்க பொறுப்பாசிரியர் எம்.வை.எம்.றகீப் மற்றும், கல்லூரியின் சதுரங்க பயிற்றுவிப்பாளர் எஸ்.எல்.சுஹ்தான் ஆகியோருக்கு கல்லூரி அதிபர் எம்.ஐ.ஜாபிர் உள்ளிட்ட கல்வி சமூகம் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment