ஹாஷிம் உமர் பௌண்டேசனின் "கல்விக்கு கரம் கொடுப்போம்" என்ற வேலைத்திட்டத்தின் கீழ் தேவையுடைய மாணவர்களுக்கு மடி கணனிகள் வழங்கும் வேலைத்திட்டத்தின் மூன்றாம் ஆம் கட்ட விநியோகம் கடந்த (09) வெள்ளிக்கிழமை மாலை மூன்று மணிக்கு கொழும்பிலுள்ள ஹாஷிம் உமர் பௌண்டேசனின் தலைமையகத்தில் இடம்பெற்றது.
ஹாஷிம் உமர் பௌண்டேசனின் ஸ்தாபகரும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன ஆலோசகருமான புரவலர் ஹாஷிம் உமர் தலைமையிலும்
ஹாஷிம் உமர் பௌண்டேசனின் பொதுச் செயலாளர் ஏ.எம்.ஜெளபரின் ஒருங்கிணைப்பில் இடம் பெற்ற இந்நிகழ்வில் இனிய நந்தவனம் பிரதம ஆசிரியர் நந்தவனம் சந்திரசேகரன்,
தினகரன் பிரதம ஆசிரியர் தே.செந்தில் வேலவர், சிரேஷ்ட ஊடகவியலாளர் ராதா மேத்தா உள்ளிட்ட பிரமுகர்கள் மடி கணனிகளைப் பெற்றுக்கொண்ட மாணவர்கள் அவர்களது பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஹாஷிம் உமர் பௌண்டேசனின்
ஊடாக இலக்கியம் மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment