முஸ்லிம் காங்கிரஸ் தலைவரிடம் பலஸ்தீன தூதுவர் பிரியாவிடை



அஸ்ரப் ஏ சமத்-
லங்கையில் மிக நீண்ட காலமாக பலஸ்தீன தூதுவராக கடமையாற்றிய பின்னர், இஸ்லாமாபாத்திற்கு இராஜதந்திரியாக இடமாற்றம் பெற்றுச் செல்லும் கலாநிதி சுஹைர் எம்.எச்.செய்த் , ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமை கட்சியின் "தாருஸ்ஸலாம்" தலைமையகத்தில் பிரியாவிடை நிமித்தம் திங்கள் கிழமை ( 5 ) சந்தித்துக் கலந்துரையாடினார்.

அதன்போது பலஸ்தீனம் சுதந்திரமான இறைமையுள்ள நாடாக மிளிர்வதற்கும், அங்கு வாழும் மக்கள் இனப் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்தும் மூன்று தசாப்த காலமாக இலங்கைப் பாராளுமன்றத்தில் ஓயாது குரல் எழுப்பி வருவதற்காக பலஸ்தீன மக்களின் சார்பில் நன்றிகளை அவர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரிடம் தெரிவித்துக் கொண்டார்.

பலஸ்தீனம் ஒரு சுதந்திரமான இறைமையுள்ள நாடாக விளங்க வேண்டும் என்பது தமது வாழ்நாள் ஆசை என்பதாக அவரிடம் தலைவர் ஹக்கீம் கூறினார்.

பிராந்திய நாடுகளில் ஒன்றான பாகிஸ்தானுக்கு தூதுவராகச் செல்லும் கலாநிதி சுஹைர் எம். எச் செய்த்தை தாம் மனப்பூர்வமாக வாழ்த்துவதாகவும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூரும் பங்குபற்றினார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :