பிரித்தானிய எடின் கோமகன் சர்வதேச விருதுக்காக சாய்ந்தமருது ஜீனியஸ்7 இளைஞர் விருதுப்பிரிவினூடாக கிழக்கு மாகாணத்தை சேர்ந்த 36 இளைஞர் யுவதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் இவ் விருதுக்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தேசிய விருதுப் பிரிவு ஊடக தெரிவு செய்யப்பட்ட இளைஞர் யுவதிகளுக்கான இவ் சர்வதேச விருது வழங்கும் விழாவிக்கு பிரதம அதிதியாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அதிமேதகு அன்ட்ரூ பெட்ரிக் (Andrew Patrick) அவர்களும் கெளரவ அதிதிகளாக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சர் ஹரின் பெர்னான்டோ , தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் பசிந்து குணரத்ன ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
தேசிய இளைஞர் விருதுப் பிரிவினால் பிரித்தானிய “எடின்பரோ கோமகன் சர்வதேச விருது வழங்கல் விழாவில் முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும், எடின்பரோ கோமகன் சர்வதேச ஜீனியஸ் 7 விருதுப் பிரிவின் தலைவரும், இளைஞர் செயற்பாட்டாளருமான முஹம்மட் ஸாஜித் ஸமான் அவர்களின் சாய்ந்தமருது ஜீனியஸ்7 விருதுப் பிரிவு ஊடாக கிழக்கு மாகாணத்தை சேர்ந்த 36 இளைஞர் யுவதிகள் 17 வெள்ளி விருதுகளையும் 19 வெங்கல விருதுகளையும் பெறவுள்ளனர்.
மகரகம இளைஞர் சேவைகள் மன்ற பிரதான மண்டபத்தில் இம்மாதம் 12 ஆம் திகதி இடம்பெறவுள்ள இவ் சர்வேதச இளைஞர் விருது வழங்கல் விழாவில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், இராஜதந்திரிகள்,பிரித்தானிய எடின்பரோ சர்வதேச விருது குழுவினர்கள் மற்றும் வெளிநாட்டு தூதரவளர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இவ்விருதானது 13-24 வயது உட்பட்ட இளைஞர் யுவதிகளின் ஆளுமை,நுண்ணறிவு, வெளிக்கள ஆய்வு, தலைமைத்துவம், ஆற்றல், கல்வி, திறமை, விளையாட்டு ,சர்வதேச தொடர்புகளுடைய இளைஞர் யுவதிகளுக்கு வழங்கப்படுகின்ற ஓர் சர்வதேச விருதென்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
0 comments :
Post a Comment