பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்துக்கும் கல்விசாரா ஊழியர் சங்கத்துக்குமிடையே விரிசலை ஏற்படுத்த சில சக்திகள் முயச்சி! –தென்கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்.டந்த 68 நாட்களாக பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்துவரும் வேலைநிறுத்த போராட்டத்துக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஆதரவை வழங்கிவரும் நிலையில், அண்மையில் FUTA -ஆசிரியர் சங்கம் எழுதிய கடிதம் ஒன்றை வைத்துக்கொண்டு, நாங்கள் கல்விசாரா ஊழியர்களின் போராட்டத்துக்கு எதிரானவர்கள் என்ற தோரணையில் சிலரால் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

இவ்வாறான கருத்துக்களை தென்கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் எ.எம்.எம். முஸ்தபா மற்றும் செயலாளர் விரிவுரையாளர் எம்.ஏ.ஏ.எம். சமீம் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கும் கல்விசார் ஊளியர்களுக்குமிடையே மிகுந்த நெருக்கமும் அன்யோன்யமும் காலம் காலமாக இருந்து வருகின்றது. இவ்வாறான நிலையை சிதைக்கும் நோக்கில் அரசியல் நோக்கங்களுக்காக சிலர் பிழையான கருத்துக்களை கூறி வருகின்றனர்.

FUTA, கல்விசாரா ஊழியர்களுக்கு எதிரானது என்ற கருத்தை நாங்கள் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம்.

அண்மையில் FUTA எழுதிய கடிதம் ஒன்றை வைத்து, அதற்கு பிழையான வியாக்கியானங்கள் கொடுக்கப்பட்டு; கல்விசாரா ஊழியர்ககளின் கோரிக்கைக்கு நாங்கள் எதிரானவர்கள் என்ற போலியான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. பல்கலைக்கழகங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள சில புல்லுருவிகள் இவ்வாறான போலிப்பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். இவர்களது அரசியல் நோக்கம் கொண்ட இவ்வாறான விசமப் பிரச்சாரங்களையும் அவர்களது பின்புலங்களையும் அறிந்து கல்விசாரா ஊழியர்கள் கருத்துக்களை முன்வைக்க வேண்டும்.

கல்விசாரா ஊழியர்களின் போராட்டம் வெற்றிபெற வேண்டும் என தெரிவித்துள்ள தென்கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், கல்விசாரா ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை என்றும் தாங்கள் ஆதரிப்பதாகவும் கடந்த 2016 ஆம் ஆண்டு, அனைத்து அரசாங்க ஊழியர்களுக்கும், அரசாங்கம் சம்பள அதிகரிப்பை 107% வழங்கிய போதும் பல்கலைக்கழகங்களைப் பொறுத்தமட்டில் பேராசிரியர்கள் மற்றும் சிரேஷ்ட பேராசிரியர்களுக்கு மட்டுமே குறித்த நிவாரணத்தை வழங்கிவிட்டு ஏனைய கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு வழங்க வில்லையென்றும் இதனையே அண்மையில் எழுதியிருந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்ததாகவும் இந்த கருத்தே திரிபுபடுத்தப்பட்டுள்ளதாகவும் திரிபுபடுத்தப்பட்டுள்ள கருத்துக்களை முற்றாக மறுப்பதாகவும் கண்டிப்பதாகவும் இவ்வாறான கருத்துக்களுக்கு அரசியல் பின்புலங்கள் இருப்பது தெட்டத்தெளிவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் என்பதை தாங்கள் வலியுறுத்துவதாகவும் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்குள் அவர்கள் சிக்கி தவிப்பதை நேரடியாக கண்டு உணர்வதாகவும் குறிப்பிட்ட ஆசிரியர் சங்கம், தென்கிழக்கு பல்கலைக்கழக ஆசியர்களுக்கும் கல்விசாரா ஊழியர்களுக்குமிடையேயான உறவு மிக நெருக்கமானது என்றும் அனைவரும் அவரவரது சுகதுக்கங்களில் பங்குகொள்பவர்கள் என்றும் தெரிவித்தார்.

எழுதியிருந்த கடித்ததில் மூன்று விடயங்களை குறிப்பிட்டு இருந்ததாகவும் அதில் Academic Allowance, MCA என்ற இரண்டையும் சிலர் தொடர்புபடுத்துவதாகவும் இவை இரண்டும் வேறு வேறான நோக்கங்களுக்கு பயன்படுத்துவது என்றும் ஊழியர்களுக்கு MCA படியை வழங்குவதில் எவ்வித எதிர்ப்பும் இல்லை என்றும் இந்த படியை வழங்குமாறு வலியுறுத்துவதாகவும் தெரிவித்தார்.

சில பல்கலைக்கழகங்களில் இருக்கும் Earn funds ஐ ஊழியர்களுக்கு ஊதியமாக கொடுக்கும் ஏற்பாடு என்பது அவ்வாறான பணம் ஊழியர்களின் ஊதியத்துக்கு போதுமாக இருக்கப்போவதில்லை என்றும் குறித்த நிதி இருப்பானது பல்கலைக்கழகங்களின் வேறு தேவைகளுக்காக பயன்படுத்தப்படுவதாகவும் அரச ஊழியர்களுக்கு அரசாங்கமே சம்பள அதிகரிப்புக்களை வழங்க வேண்டிய தேவையுள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :