நான் காலஞ்சென்ற ஜனாதிபதியின் மகன் என்ற வகையில் நாட்டைக் கட்டியெழுப்பும் உத்தரவாதத்தை உங்களுக்கு அளிக்கின்றேன். ஏறாவூரில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்ஏறாவூர் நிருபர் சாதிக் அகமட்-
வீன உலகில் வளமான டிஜிற்றல் எதிர்காலத்திற்காக இளைய தலைமுறையை ஸ்மார்ற் டிஜிற்றல் கணனிப் பயன்பாட்டில் தேர்ச்சி பெற்ற சமூகமாக மாற்றுதல் எனும் எதிர்க்கட்சித் தலைவரின் எண்ணக்கருவுக்கமைவாக டிஜிற்றல் கற்றல் வகுப்பறை, கணினிகள், ஆங்கில அகராதிகள் ஆகியவற்றைக் கையளிக்கும் நிகழ்வு ஏறாவூர் அல்முனீறா பாலிகா மகா வித்தியாலயத்தில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிறேமதாஸவின் பங்கு பற்றுதலுடன் புதன்கிழமை 03.07.2024 இடம்பெற்றது.

சுமார் 12 இலட்ச ரூபாய் பெறுமதியான கணினி உபகரணங்கள் இங்கு மாணவர்களின் கற்றலுக்காக கையளிக்கப்பட்டன. அத்துடன் சர்வதேச மொழியான ஆங்கிலத்தைக் கற்றுக் கொள்வதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் ஒரு தொகுதி ஆங்கில அகராதிகளும் கையளிக்கப்பட்டன.

நிகழ்வில் உரையாற்றிய சஜித் பிறேமதாஸ நான் காலஞ்சென்ற ஜனாதிபதியின் மகன் என்ற வகையில் உங்களுக்கு உத்தரவாத மளிக்கின்றேன் இந்த நாட்டை இன மத பேதமற்ற முறையில் ஒன்றுபடுத்தி வளப்படுத்துவேன். வடக்கு கிழக்கு உட்பட சீரழிந்து கிடக்கும் நாட்டை தமிழ் முஸ்லிம் சிங்களம் என்ற இன மத பேதமின்றிக் கட்டியெழுப்ப வேண்டும். அதற்குரிய காலம் கனிந்துள்ளது. இவ்வாண்டு முடிவடைவதற்குள் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட பாடசாலைகளை ஸ்மார்ற் பாடசாலைகளாக மாற்றும் திட்டத்தை ஆரம்பிக்வுள்ளோம். ஸ்மார்ற் டிஜிற்றல் கணினி கற்றல் வசதிகளை ஏற்படுத்தித் தரப்படும்;. அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 360 பாடசாலைகள் வளமடையும்.” என்றார்.

நிகழ்வில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான எம்.எஸ்.எஸ். அமீரலி, எஸ். கணேசமூர்த்தி, கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.எஸ். சுபைர்

பாராளுமன்ற உறுப்பினர் அலி சாகிர் மௌலானா அவர்களின் புதல்வர் அம்ஜத் மௌலானா மற்றும் மாவட்ட முகாமையாளர் ஐக்கிய மக்கள் சக்தி
க. சிறிஸ்குமார் முன்னாள் ஏறாவூர் நகர சபை உறுப்பினர்களான எஸ் எம் ரியால் சபூர்தின் ஹாஜியார் அவர்களும்.மற்றும் ஏறாவூர் அல் முனீரா
மாக வித்தியாலய அதிபர் எம் எம் மஹாத் உட்பட மேலும் பல அரசியல் பிரமுகர்களும் அதிபர்கள், ஆசிரியர்கள் மாணவர்களும் பெற்றோரும் கலந்து கொண்டனர்


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :