பல்கலைக்கழக கற்கை நெறி தெரிவு மற்றும் விண்ணப்பிப்பது பற்றி வழிகாட்டல் செயலமர்வுஎம்.எம்.றம்ஸீன்-
USF Srilanka அமைப்பு மற்றும் சாய்ந்தமருது இளங்கலை பட்டாதாரி அமைப்புக்கள் இணைந்து 2023 உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு இலவசமாக பல்கலைக்கழக கற்கை நெறிகளை தெரிவு செய்தல் ,விண்ணப்பிப்பது பற்றியும் ,கையேடுகள் பற்றியும் அறிவுறுத்தும் செயலமர்வு சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.எப்.எச். சிப்லி அவர்களினால் நடாத்தப்பட்டது.

இச் செயலமர்வில் சுமார் 120 க்கு மேற்பட்ட இவ்வருடம் பல்கலைக்கழகத்திற்கு தகுதியான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

இந் நிகழ்வில் யூ.எஸ்.எப். அமைப்பின் செயற்பாட்டாளர்கள், அமைப்பின் ஆலோசகர்கள் மற்றும் இளங்கலை பட்டதாரி அமைப்பின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்..இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :