2025 முதல் காலாண்டுக்கு பிறகு சொத்து வரி அமுல்படுத்தப்படும். வரியால் சாதாரண பொது மக்கள் பாதிக்கப்பட மாட்டாது.



த்தேச சொத்து வரியானது 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டின் பின்னர் அமுலுக்கு வரும் எனவும் அது 90 வீதமான சாதாரண பொது மக்களை பாதிக்காது எனவும் நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய வலியுறுத்தியுள்ளார்.

இன்று காலை ருவன்வெல்ல பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், மிகவும் முற்போக்கான வரிமுறையான இது, உலகின் பல நாடுகளில் அமுல்படுத்தப்படும் வரியாக இருக்கிறது என்றும் திரு.என்.எம்.பெரேரா நிதியமைச்சராக இருந்த போது கூட இந்த வரி அமுல்படுத்தப்பட்டதாக குறிப்பிட்டார்.

அத்துடன், இந்த வரி அமுல்படுத்தப்பட்டதன் பின்னர், எதிர்காலத்தில் சாதாரண மக்களிடம் அறவிடப்படும் மறைமுக வரியின் அளவைக் குறைக்க முடியும் என்றும், இதன் மூலம் 100% மக்கள் இந்த வரியின் பலனை அனுபவிக்க முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :