வடமேல் மாகாண புதிய ஆளுநராக பதவியேற்றிருக்கும் முன்னாள் சுற்றாடல் துறை அமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் எதிர்காலத்தில் உங்கள் பணிகள் சிறப்பாக அமைய பிரார்த்தனை செய்கின்றேன் என ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணி கட்சியின் தலைவர் அஷ்ஷெய்க் மௌலவி சதீக் (முப்தி) தெரிவித்தார் .
அவர் மேலும் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது
கௌரவ வடமேல் மாகாண புதிய ஆளுநர் ஹாபீஸ் நசீர் அஹமட் அவர்களை பொறுத்தவரையில் கடந்த காலங்களில் அவர் கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்த காலகட்டத்திலும் சுற்றாடல் துறைஅமைச்சராக இருந்த காலகட்டத்திலும் கிழக்கு மாகாணமக்களுக்கு தமிழ் முஸ்லிம் இன மதம் கட்சி பேதமின்றி பாரிய உன்னதமான சேவைகள் செய்தவராவார்.
அத்துடன் வடமேல் மாகாணத்தைப் பொறுத்தவரையில் இரண்டு மாவட்டங்கள் இருக்கின்றன குருநாகல், புத்தளம் புத்தளம் மாவட்டத்தை பொறுத்தவரையில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர் ஆனால் குருநாகல் மாவட்டத்தை பொறுத்தவரையில் முஸ்லிம் சமூகம் சிறுபான்மையாக வாழ்கின்ற ஒரு மாவட்டம் 163 க்கும் மேற்பட்ட முஸ்லிம் கிராமங்கள் அங்கே காணப்படுகின்றன.
கல்விலும் மிகப் படித்தரம் உயர்ந்த மாவட்டமாகும் இருப்பினும் 20 வருடமாகியும் இன்னும் முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாத ஒரு மாவட்டமாக இந்த மாவட்டம் காணப்படுகின்றது என்றும் கௌரவ ஆளுநர் ஹபிஸ் அஹமத் நசீர் அவர்களுக்கு ஆளுநர் பதவி கிடைத்திருப்பது குருநாக்கல் மாவட்ட சிறுபான்மை மக்களுக்கு பக்கபலமாக அமையும் என்றும் இந்த ஆளுநரின் அதிகாரத்தை குருநாகல் மாவட்ட மக்கள் சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டுமானால் குருநாகல் மாவட்டத்தில் உள்ள சிவில் அமைப்புகள் கலாசார அமைப்புகள் வியாபார அமைப்புகள் அனைவரும் ஒன்றிணைந்து கௌரவ ஆளுநர் ஹபீஸ் அஹமத் நசீர் அவர்களுடன் இணைந்து மாவட்டத்தின் அபிவிருத்தி திட்டங்களை நிவர்த்தி செய்வதற்கு கட்சி பேதமின்றி ஒற்றுமையாக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணி கட்சியின் தலைவர் அஷ்ஷெய்க் மௌலவி சதீக் (முப்தி) மேலும் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment