விவசாயிகளுக்கான வெள்ள இழப்பீடு எங்கே..?டந்த பெரும் போகம் இலங்கை பூராகவும் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்தமை யாவரும் அறிந்ததே. பெரும்பாலான விவசாயிகளின் வேளாண்மை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிவடைந்திருந்தது எனலாம். அம்பாறை மாவட்டம் உட்பட பல பகுதிகளில் ஓரிரு நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்த வேளாண்மைகள் வெள்ளத்தால் பாதிப்படைந்திருந்தன. இது விவசாயிகளுக்கு பாரிய இழப்பை ஏற்படுத்தியிருந்தது. சிலருக்கு அது மீள முடியாத இழப்பாக அமைந்திருந்தது எனலாம்.

அரசு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவுள்ளதாக கூறி, அவர்களிடமிருந்து இழப்பீட்டு படிவங்களை பெற்றிருந்தது. இதுவரை எவருக்கும் இழப்பீடு வழங்கப்பட்டதாக தெரியவில்லை. சிறு போக விவசாயமும் பெரும்பாலான பகுதிகளில் ஆரம்பமாகி விட்டது. கடந்த பெரும் போகத்தில் வெள்ளத்தால், தங்களது முதலீடுகளை இழந்தோருக்கு, சிறு போகத்தில் அரச இழப்பீடு ஊக்குவிப்பாக அமைதல் வேண்டும். சிறு போக விவசாயம் ஆரம்பிப்பதற்கு முன்னர் இழப்பீடு வழங்கப்படுவதே பொருந்தமானது. இன்னும் இழப்பீடு தாமதிப்பதானது இழப்பீடு வழங்கப்படும் நோக்கத்தை பாழ் படுத்தி விடும்.

உடனடியாக விவசாயிகளுக்கான வெள்ள இழப்பீடுகளை வழங்க, அரசு மற்றும் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான அழுத்தங்களை அரசியல் வாதிகள் மற்றும் பொது நிறுவனங்கள் முன்னின்று வழங்க வேண்டும்.

ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :