ஹரீஸ் எம்பியின் முயற்சியின் பயனாக கல்முனை சாஹிரா தேசிய பாடசாலைக்கு பவள விழா நினைவு கட்டிடம்
நூருல் ஹுதா உமர்-
ல்முனை கல்வி வலய கல்முனை சாஹிரா தேசிய பாடசாலைக்கு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் முயற்சியால் தான் கல்விகற்ற பாடசாலைக்கு 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு முதற் கட்டமாக சுமார் 60 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் புதிய கேட்போர் கூடத்துடனான நிர்வாகக் கட்டிடம் நிர்மாணிக்கப்படவுள்ளது.

அதற்கான விலை மனுக்கோரல் அம்பாறை அரசாங்க அதிபரினால் இன்று தேசிய பத்திரிகைகள் வாயிலாக கோரப்பட்டுள்ளது. பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு, பழைய மாணவர்கள் அமைப்பின் பங்குபற்றலுடன் பாடசாலை அதிபர் எம்.ஐ. ஜாபிரின் தலைமையில் அண்மையில் இடம்பெற்ற கள விஜயத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் மதிப்பீட்டு அறிக்கையும், சாத்தியவள செயற்பாடுகளையும் நேரில் சென்று பார்வையிட்டதுடன் கட்டிடத்தை நிர்மாணிக்க தேவையான நடவடிக்கைகளை நிதியமைச்சு, கல்வி அமைச்சு, கல்வித் திணைக்களம் போன்றவற்றில் மேற்கொண்டிருந்தார்.

இந்த நிர்மாண பணிகளுக்கு தேவையான மேலதிக விடயங்களை அம்பாறை மாவட்ட பிரதம பொறியியலாளர் ஏ.எம். சாஹிர் தலைமையிலான மாவட்ட செயலக அதிகாரிகளும், கல்வித்திணைக்கள அதிகாரிகளும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :