அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டில் ஹட்டனில் இப்தார் நிகழ்வு


லங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு ஹட்டன் டி.கே.டபிள்யூ மண்டபத்தில் நேற்று (03.04.2024) நடைபெற்றது.

வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி, இ.தொ.காவின் தவிசாளர், நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரன் மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல் நிர்வாகங்களின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தை வலுப்படுத்தும் வகையில் அமைச்சர் ஜீவன் தொண்டமானால் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அத்தோடு, நுவரெலியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட முஸ்லீம் பள்ளிகளுக்கு அபிவிருத்தி பணிகளுக்கான நிதி உதவியும் வழங்கி வைக்கப்பட்டது.

ஊடக செயலாளர்
நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சு


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :