கற்றல் கற்பித்தலை புரட்சிகரமாக்கும் Generative AI தொழில்நுட்பம்!மகாலத்தில் பல்வேறு துறைகளிலும் புரட்சியை ஏற்படுத்தி வரும் Generative Artificial Intelligence எனப்படும் உருவாக்கும் செயற்கை நுண்ணறிவு அனைவரதும் பேசுபொருளாக மாறிவருகின்றது. இந்தத் தொழில்நுட்பம் தொடர்பான பல அம்சங்கள் உலக அரங்குகளில் குறிப்பாக யுனெஸ்கோ அளவில் விவாதிக்கப்படுகின்றது.

யுனெஸ்கோவானது இது தொடர்பான நீண்ட கால கொள்கைத் திட்டமிடல், மனிதத் திறன் மேம்பாடு போன்ற விடயங்களில் உலக நாடுகளை நெறிப்படுத்தும் உடனடி நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. அதனடிப்படையில் கற்றல் கற்பித்தல் துறையில் Generative AI தொழில்நுட்பத்தின் பயன்பாடு தொடர்பான பிரத்தியேகமான வழிகாட்டல்களையும் வெளியிட்டுள்ளது. குறிப்பாக பாடத்திட்ட வடிவமைப்பு, கற்றல், கற்பித்தல் மற்றும் ஆய்வு நடவடிக்கைகளில் GenAI ஐ ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஊக்குவிக்கிறது.

இந்தப் பின்னணியில் கல்வியாளர்களை மேம்படுத்தவும் சமீபத்திய முன்னேற்றங்களுடன் வினைத்திறனான கல்வி முறையை உருவாக்கவும் Aspire Management and Development Consultants (Pvt) Ltd நிறுவனம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இத்தொடரில் கற்பித்தலில் Gen AI இன் பயன்பாடு எனும் தலைப்பில் இந்நிறுவனம் நடாத்திய மூன்று முன்னோடி இணையவழி பயிற்சி அமர்வுகளில் சுமார் 350க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். இந் நிறுவனத்தின் பணிப்பாளரும் முகாமைத்துவ ஆலோசகருமான திரு. இஸ்மாயில் A அஸீஸ் அவர்களால் நடத்தப்பட்ட இவ்வமர்வுகள் கல்வி நடைமுறைகளில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதில் உள்ள வாய்ப்புக்களையும் உபாயங்களையும் ஆராய்ந்தன.

Gen AI இன் அறிமுகக் கண்ணோட்டம் முதல் ChatGPT போன்ற அதிநவீன கருவிகளைப் பயன்படுத்துவதற்கான அடிப்படைக் கூறுகள் வரை பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கிய
பயிற்சி அமர்வுகள் கற்பித்தல் செயல்முறையில் உருவாக்கும் நுண்ணறிவை திறம்பட பயன்படுத்தும் நுட்பங்களை அறிமுகப்படுத்தியது.. தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூல ஆசிரியர்களுக்கு தனித்தனியான பயிற்சி அமர்வுகள் நடத்தப்பட்டன.

Aspire Consultants நிறுவனம் தனது சமூகப் பொறுப்பின் (CSR) ஒரு பகுதியாக இச் செயற்திட்டத்தை முன்னின்று நடத்துவதில் பெருமிதமடைகிறது. கொவிட் காரணமாக நாடு பூராகவும் கல்வி நடவடிக்கைகள் முடக்கப்பட்டிருந்த சவாலான காலகட்டத்தில் இந்நிறுவனம் "திறம்படக் கற்பித்தலுக்கான ஒன்லைன் கருவிகளின் பயன்பாடு" எனும் தலைப்பில் ஆசிரியர்களுக்கு இலவச பயிற்சி அமர்வுகளை அளிப்பதில் முன்னோடியாக செயல்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிறுவனம் ஏராளமான ஆசிரியர் பயிற்சி நிகழ்ச்சிகள், மாணவர் ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள், மற்றும் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்குகளையும் நடத்தி வருகின்ற அதேவேளை இவ்வாறான நிகழ்ச்சிகள் மூலம் 200,000 இற்குமேற்பட்ட மாணவர்கள், 1000 இற்குமேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் 10,000 க்குமேற்பட்ட பெற்றோர்கள் பயனடைந்துள்ளனர்.

Generative Artificial Intelligence: The New Frontier in Education Innovation

In today's rapidly evolving landscape, Generative Artificial Intelligence (Gen AI) stands out as a groundbreaking force, reshaping numerous sectors. Its profound impact has sparked global conversations, prominently featured in forums worldwide, with UNESCO taking a leading role. Recognizing the pivotal role of Gen AI, UNESCO has swiftly mobilized efforts to facilitate international cooperation. These efforts aim to address crucial matters such as long-term policy frameworks and fostering human capacity development. As part of this initiative, UNESCO has released comprehensive guidelines, outlining the responsible integration of Generative AI within educational contexts.These guidelines emphasize leveraging Gen AI's capabilities to reimagine learning, teaching, and research methodologies. Specifically, they encourage innovative curriculum designs that harness the creative potential of Generative AI, offering transformative opportunities for educational advancement.

Spearheading this transformative endeavor is Aspire Management and Development Consultants (Pvt), a dynamic organization committed to empowering educators with the latest advancements in pedagogy. Recently, Aspire Consultants undertook a pioneering venture, engaging over 350 teachers in an immersive training program aimed at harnessing Generative Intelligence in teaching. Led by Mr. Ismail A Azeez MBA, CEO and Principal Consultant of Aspire Consultants, the online interactive sessions delved into the intricacies of integrating Generative Intelligence into educational practices.

Aspire Consultants takes great pride in spearheading this complimentary program as part of its Corporate Social Responsibility (CSR) commitment, aligning closely with its vision of fostering 'A Nation with conscious human excellence'. With a strategic emphasis on educational development initiatives, Aspire Consultants has curated a diverse array of programs aimed at enhancing teacher excellence, fostering effective parenting, and catering to the holistic growth of students.

Having reached out to over 1000 teachers, 200,000+ students and more than 10,000 parents through various initiatives, Aspire Consultants remains dedicated to making a meaningful impact in the educational landscape. Notably, the organization has been at the forefront of providing free training for teachers in leveraging online tools for effective teaching, particularly during the challenging period of lockdown when traditional educational channels were disrupted abruptly. Aspire Consultants continues to set benchmarks in educational empowerment, demonstrating its unwavering commitment to nurturing talent, fostering innovation, and ensuring equitable access to quality education for all.


Aspire Management and Development Consultant (Pvt) Ltd.

No. 718, 7th Floor,
Janajaya City,
Rajagiriya

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :