விபத்தொன்றில் இரு மாடுகள் உயிரிழந்துள்ள சம்பவம் -சம்மாந்துறை பிரதான வீதியில் சம்பவம்பாறுக் ஷிஹான்-
விபத்தொன்றில் இரு மாடுகள் உயிரிழந்துள்ள சம்பவம் அம்பாறை சம்மாந்துறை பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.

இன்று (21) காலை அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட சம்மாந்துறை தொழிநுட்பக் கல்லூரிக்கு அருகே வீதியில் கட்டாக்காலிகளாக திரிந்த இரு மாடுகள் மோதுண்டு இறந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.

மேலும் குறித்த விபத்து இரவு இடம்பெற்றுள்ளதுடன் குறித்த விடயம் தொடர்பாக சம்மாந்துறை பொலிஸ் மற்றும் சம்மாந்துறை பிரதேச சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் சம்மாந்துறை பகுதி வீதிகளில் கட்டாக்காலி மாடுகள் ஆடுகள் நாய்கள் அதிகளவாக உலாவி திரிவதாக பொதுமக்கள் குற்றஞ் சுமத்துகின்றனர்.அத்துடன் திண்மக்கழிவுகள் உரிய முறையில் அகற்றாமையினால் கட்டாக்காலிகளின் தொல்லை தினமும் இப்பகுதியில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :