மக்கள் பல்வேறு தேவைகளுடன் வாழ்ந்து வருகின்றனர். அவர்களது தேவைகளை சரியாக இனங்கண்டு அவைகளை தீர்த்துவைக்க முனையவேண்டும். இங்கு உலாவரும் அரசியல்வாதிகளிடம் சரியான வேலைத்திட்டங்கள் எதுவுமில்லை என்று சமூக செயற்பாட்டாளரும் ECM நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளரும் பொறியலாளருமான உதுமாங்கண்டு நாபீர் அவர்கள் தெரிவித்தார்.
இன்று 2024.04.08 ஆம் திகதி சாய்ந்தமருதில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தேவையுடைய மக்களின் நலனில் மிகுந்த அக்கறையுடன் பல்வேறு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்திவரும் நாபீர் அவர்கள், புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு புத்தாடைகள் வழங்கும் திட்டத்தின்கீழ் இன்று சாய்ந்தமருதில் ஆடைகள் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய பொறியலாளர் நாபீர், சில அரசியல்வாதிகள் சீசன் வியாபாரிகள் போல் தேர்தல் வந்தால் நமது பகுதிகளுக்கு வருகை தந்து படம் காட்டிவிட்டு செல்கின்றனர். எங்கள் பிரதேசத்திலுள்ளவர்களை ஏமாளிகளாக நினைத்து, அவர்களது தேவைகளை அடைந்து கொள்கின்றனர். அவர்களுக்கு சில நமது பிரதேச எஜண்டுகளையும் வைத்து உலாவருகின்றனர். இவ்வாறானவர்களை மக்கள் இனம்காண வேண்டும்.
நமது பிரதேசத்தில் பல்வேறு தேவைகள் இருக்கின்றன அவைகளை இந்த மண்ணில் பிறந்தவர்களாலேயே அடையாளம் கண்டு தீர்த்து வைக்க முடியும். நான் இந்த பிரதேசத்தில் கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக எவ்வித எதிர்பார்ப்புமின்றி என்னால் முடிந்ததை இந்தமக்களுக்கு செய்து வருகின்றேன். வேலைத்திட்டம் இருந்தும் பணம் இருந்தும் சரியான அரசியல் அதிகாரம் ஒன்று இல்லை என்றால் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவது கடினமான விடயம். எனது கையில் மக்கள் அதிகாரத்தை தருவார்கள் என்றால் பிரதேச இன வேறுபாடின்றி இந்த மக்களுக்காக என்னை அர்ப்பணிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
என்னைப்போன்றவர்களின் தேவையை மக்கள் எத்ர்பார்ப்பார்களாக இருந்தால் நான் அவர்களுக்காக என்னை அர்ப்பணிக்க தயாராய் இருக்கின்றேன். நான் கடந்த முப்பது வருடங்களாக ஆற்றிவரும் மக்கள் நலத்திட்டங்கள் தேவையா? இல்லையா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment