கட்சி அரசியலுக்கு ஐக்கிய மக்கள் சக்தி முன்னுதாரணமாக திகழ்கிறது. உயர் தரத்திலான கல்விக்கே நாடாக நாம் முன்னுரிமை வழங்க வேண்டும்.-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசரு நாடாக நாம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கிட்டத்தட்ட 100 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன்பட்டிருக்கும் நேரத்தில், இதிலிருந்து மீள்வதற்கு ஏற்றுமதி சார்ந்த கல்வியே இதற்கு ஒரே வழி என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

முதலாவதும், இரண்டாவதும் மூன்றாவதும் தாய்நாடு போல் முதலாவதும் இரண்டாவதும், மூன்றாவதுமாக உயர்தரத்திலான கல்வியே வழங்கப்பட வேண்டும்.இதன்மூலம் கல்வி அறிவும் திறனும் கொண்ட தலைமுறை உருவாகும்.இது தேசிய பாதுகாப்பைக் கூட உறுதி செய்யும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 152 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், புத்தளம்,சிலாபம், புனித செபஸ்டியன் நவோதய கல்லூரிக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு ஏப்ரல் 10 ஆம் திகதி இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில், ​​கல்லூரியின் நடனம்,வாத்தியம் மற்றும் அரங்கேற்றங்கள் குழுவினருக்குத் தேவையான பொருட்களை கொள்வனவு செய்வதற்குத் தேவையான ஒரு இலட்சம் ரூபா நிதியையும் நன்கொடையாக வழங்கி வைத்தார்.

🟩மீனவர்களும் அடகு வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது எமது நாட்டு மீனவர்களின் வீட்டில் இருக்கும் தங்கத்தை அடகு வைத்து அப்பணத்திற்கு எரிபொருள் வாங்கி மீனவத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறானதொரு ஒரு நிலை நாட்டில் முன்னேப்போதும் ஏற்பட்டதில்லை.

அமைச்சர்களான பெஸ்டஸ் பெரேரா மற்றும் ஜோசப் மைக்கல் பெரேரா ஆகியோரின் காலத்தில் கடற்றொழில் துறையின் பொற்காலம் உதயமானது. இவ்விரு அமைச்சர்களும் மீன்பிடித் தொழிலை போட்டி போட்டு அபிவிருத்தி செய்தாலும், தற்போது 18,000 ரூபாவிற்கு சிறிய படகுகளுக்கு நகைகளை அடகு வைத்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
20 வருடங்களாக மீனவ சமூகம் வாழும் பகுதியில் பணியாற்றிய தனக்கும் மீனவ சமூகம் குறித்த புரிதலும் உண்டு. இவ்வாறு ஜீவனோபாயத்திற்கும் கஷ்டங்களை எதிர்நோக்கி வரும் பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றிற்கு இத்தகைய திறன் வகுப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது மீனவர்களின் பிள்ளைகளுக்கும் சர்வதேச தரத்திலான கல்வியை பெற வேண்டும் என்ற தூய நோக்கிலாகும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் கல்வி குறித்து சிந்திக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

🟩ஸ்மார்ட் கல்வி போலவே ஸ்மார்ட் மீன்பிடித்துறை குறித்தும் நாம் சிந்திக்க வேண்டும்.

ஸ்மாரட் கல்வியும், ஸ்மார்ட் விவசாயமும் இருப்பதைப் போல மீன்பிடித் தொழிலும் ஸ்மார்ட்டாக மாற வேண்டிய தேவையுள்ளது. பாரம்பரிய முறைக்கு அப்பாற்பட்ட உயர் தொழில்நுட்ப முறைகளை இங்கு பயன்படுத்தலாம். ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்ட சாசன மாநாட்டில், சர்வதேச கடல் சட்டத்தின் மூலம் எமது கடற்கரையிலிருந்து 200 கடல் மைல் தொலைவிக்குட்பட்ட ஒரு தீவு நாடு எமக்கு சொந்தமாக இருந்தாலும், இந்த கடல் வளத்தை நாம் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்வதாக இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இலங்கையில் வேறு யாராலும் நம்பர் 1 ஆக முடியாது என்ற போதிலும், ஐக்கிய மக்கள் சக்தியால் இலங்கையில் நம்பர் 1 ஆக இருக்க முடியும். காரணம் இலங்கை வரலாற்றில் ஒரு கட்சி இவ்வாறான பணியை முன்னெடுப்பது இதுவே முதல் தடவையாகும். கட்சி அரசியலுக்கு ஐக்கிய மக்கள் சக்தி முன்னுதாரணமாக திகழ்வதால் இதற்கு ஆதரவளிக்கும் பெருமளவிலான மக்கள் நாட்டில் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :