வலைப்பந்தாட் விளையாட்டை பிரபலப்படுத்த பாடசாலை மாணவர்களுக்கிடையிலான சம்பியன்சிப் போட்டிஅஸ்ஹர் இப்றாஹிம்-
லங்கையில் வலைப்பந்து விளையாட்டை மேலும் பிரபலப்படுத்தி தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் திறமையான வீராங்கனைகளை உருவாக்கும் பரந்த நோக்கில் மாவட்டங்கள் தோறும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஹட்டன் நெஷனல் வங்கி ,இலங்கை பாடசாலைகள் வலைப்பந்தாட்ட சங்கத்தின் ஒத்துழைப்புடன் பாடசாலைகளுக்கு இடையிலான வலைப்பந்து சம்பியன்ஷிப் போட்டியொனன்றை அண்மையில் மொனராகலை நகரசபை மைதானத்தில் ஏற்பாடு செய்திருந்தது.

இதன் போது வெற்றி பெற்றவர்களுக்கும் இரண்டாம் இடம் பிடித்தவர்களுக்கும் ரொக்கப்பரிசுகளும், பங்குபற்றிய அனைத்து வீரர்களுக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இலங்கை பாடசாலைகள் வலைப்பந்தாட்டச் சங்கத்தின் பூரண கண்காணிப்பின் கீழ் நடைபெற்ற இச்சுற்றுப்போட்டியின் போது, தேசிய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்திய வீராங்கனைகளை சந்திக்கும் வாய்ப்பு பாடசாலை மாணவிகளுக்குக் கிடைத்தத குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :