இலங்கை இஸ்ரேலில் தொழில் வாய்ப்பு ஒப்பந்தம் கைச்சாத்து!- அமைச்சர் மனுஷ நாணயக்காரஸ்ரேலில் இலங்கைத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்த இரு நாட்டு அரசாங்கங்களுக்கிடையில் ஒப்பந்தங்கள் கைச்சாதப்பட்டுள்ளன என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார நேற்று (20) தெரிவித்தார்.

இஸ்ரேலில் வீடு சார்ந்த பராமரிப்பு, ஹோட்டல்கள், உணவகங்கள், நிர்மாணம் மற்றும் உள்கட்டமைப்பு போன்ற துறைகளில் இலங்கைப் பணியாளர்களுக்கு வரும் நாட்களில் வேலைவாய்ப்புக்கள் கிடைக்கப் பெறவுள்ளன

இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தொழிலாளர்களைப் பற்றி அறிந்து கொள்வதற்காகவும், அந்நாட்டு அதிகாரிகளுடன் இது தொடர்பான வேறு சில உடன்படிக்கைகளை மேற்கொள்ளவதற்காக வேண்டி அமைச்சர் இஸ்ரேலுக்கு பயணத்தை மேற்கொண்டு உள்ளார்

இப்பயணத்தின் போது உள்நாட்டு அமைச்சர், நிர்மாணத்துறை அமைச்சர், போக்குவரத்து அமைச்சர், தொழிலாளர் அமைச்சர் மற்றும் வெளிநாட்டு அமைச்சர் உட்பட ஐந்து அமைச்சர்களை சந்தித்து கலந்துரையாடும் வாய்ப்புகள் கிடைத்துள்ளன.

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் .

இஸ்ரேலிய தொழில் அமைச்சருடனான கலந்துரையாடலின் போது, இலங்கைத் தொழிலாளர்களின் பணி நிலைமைகள், பாதுகாப்பு மற்றும் சம்பளம் குறித்து கலந்துரையாடப்பட்டது .

அத்துடன் இஸ்ரேலில் நிர்மாணத்துறையில் வேலை வாய்ப்புகள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது . இதுவரை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாயிப்பு அமைச்சினால் இவ்வேளை வாய்ப்புகளுக்குத் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்க ஒரு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டுள்ளது .மேலும் மற்றொரு தேர்வு மே மாத ஆரம்பத்தில் நடத்தப்பட்ட உள்ளது .

தற்போது ஹோட்டல் மற்றும் உணவகத் துறையில் தொழிலாளர்கள் பற்றாக்குறை நிலவுகின்றமையால் அவற்றை நிரப்புவதற்கும் எடுக்கப்பட்டுள்ளது அத்துடன் அதிகளவிலான பெண்களை விவசாயத் துறைக்கும் அனுப்ப தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் நாடு பூராவும் நடை முறைப் படுத்தப்பட்டு வரும் ஜயகமு ஸ்ரீ லங்கா மக்கள் நடமாடும் சேவை ஊடாக இஸ்ரேலிய தொழில் வாய்ப்புகளுக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

எனவே நாளை மற்றும் நாளை மறுதினம் (22 ,23 ) மாத்தளை எட்வர்ட் மைதானத்தில் நடைபெறவுள்ள ஏழாவது ழ்"ஜயகமு ஸ்ரீ லங்கா "வில்

கலந்து கொண்டு பதிவுகளை மேட்கொள்ளுமாறு உங்களை அழைக்கிறோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :