சீருடை அறிமுக நிகழ்வு



எச்.எம்.எம்.பர்ஸான்-
கோறளைப்பற்று மேற்கு கல்விக் கோட்டப் பாடசாலைகளிலுள்ள உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்வு புதன்கிழமை (6) இடம்பெற்றது.

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் வீ.ரீ.அஜ்மீர் தலைமையில் இந்நிகழ்வு மீராவோடை அல் ஹிதாயா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.

கல்குடா அகீல் அவசர சேவைகள் பிரிவு தலைவர் எம்.ஏ.சீ.நியாஸ் ஹாஜியின் நிதிப் பங்களிப்பில் இந்த சீருடை வழங்கி வைக்கப்பட்டது.

சீருடை வழங்கும் நிகழ்வில் கோட்டக் கல்விப் பணிப்பாளர் வீ.ரீ.அஜ்மீர், அகீல் அவசர சேவைகள் பிரிவு தலைவர் அல் ஹாஜ் எம்.ஏ.சீ.எம். நியாஸ் மீராவோடை அல் ஹிதாயா வித்தியாலய அதிபர் ஏ.ஜே. மர்சூக், ஆசிரிய ஆலோசகர் எம்.பி.எம்.நபீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சீருடைகளை வழங்கி வைத்த கல்குடா அகீல் அவசர சேவைகள் பிரிவு தலைவர் அல் ஹாஜ் நியாசுக்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர் வீ.ரீ.அஜ்மீர் நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :