சிட்னியில் வெள்ளியன்று சுவாமி விபுலானந்த அடிகளாரின் சிலை திறப்பு விழாவி.ரி. சகாதேவராஜா-
லகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் திருவுருவச்சிலை திறப்பு விழா அவுஸ்திரேலியா சிட்னி மாநகரில், எதிர்வரும் 29 ஆம் தேதி வெள்ளியன்று
இடம்பெறவுள்ளது.
சிட்னியில் வாழும் காரைதீவைச் சேர்ந்த "உதயசூரியன்" மாணவர் உதவி மையத்தின் தலைவரும், "உதயசூரியன்" பத்திரிகையின் நிர்வாக ஆசிரியருமான பிரபல பரோபகாரி நாகமணி குணரெத்தினம்,"கிழக்கு உதயசூரியன்" முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாருக்கு சிலை எடுக்கிறார்.
சுவாமிகள் பிறந்த இலங்கை திருநாட்டிற்கு வெளியே முதல் தடவையாக கடல் கடந்த நாடுகளில் சுவாமிகளின் திருவுருவச் சிலை நிறுவும் முதல் வரலாற்று நிகழ்வு இதுவாகும்.
இச் சிலை சுவாமி விபுலானந்த அடிகளாரின் 132 ஆவது ஜனன தினமான 27.03.2024 ஆம் திகதிக்கு பின்வரும் 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சிட்னி மாநகரில் துர்க்கை அம்மன் ஆலய மண்டபத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது.

இச்சிலை திறப்புவிழாவிற்கு உலகநாடுகளிலிருந்து குறிப்பாக இந்தியா லண்டன் கனடா சிங்கப்பூர் மலேசியா பிரான்ஸ் இலங்கை போன்ற நாடுகளிலிருந்து பல பேராளர்கள் சிட்னிக்கு வருகைதரவிருக்கின்றனர்.

வித்தகர் சுவாமி விபுலாநந்தஅடிகளார் பிறந்த காரைதீவுமண்ணிலிருந்து சுவாமி விபுலாநந்த ஞாபகார்த்த பணிமன்ற முன்னாள் தலைவரும் ஆலோசகருமான விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா தலைமையிலும் ,மட்டக்களப்பு மண்ணிலிருந்து மட்டக்களப்பு தமிழ் சங்கத் தலைவர் வி.ரஞ்சிதமூர்த்தி தலைமையில் குழுவினர் இச்சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள ஏற்பாடாகியுள்ளது.
.உலகின் முதல் தமிழ்ப்பேராசிரியர் சுவாமி விபுலாநந்தஅடிகளாருக்கு இலங்கைநாட்டிற்கு வெளியே முதன்முதல் அவுஸ்திரேலியமண்ணில் முதலாவது வெண்கலச்சிலை திறந்துவைக்கப்படவிருக்கின்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்தர்ப்பம் இது.

சுவாமியின் அபிமானியும்எழுத்தாளரும் சமுகசேவையாளருமான அவுஸ்திரேலியாவின்தலைநகர் சிட்னியில் வாழும் காரைதீவைச்சேர்ந்த திரு.நா.குணரெத்தினம் தன்னந்தனியனாக நின்று இவ்வெண்கலச்சிலையை நிறுவியுள்ளார்.
சிலைதிறப்புவிழாவின்போது " சிட்னியில் அடிகளார் படிவமலர் " எனும் சிறப்பு மலரும் வெளியிடப்படவிருக்கிது.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :