வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலய தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் ஏர் சஞ்சிகை வெளியீடும்!ஏறாவூர் நிருபர் சாதிக் அகமட்-
ட்டக்களப்பு கல்குடா வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலய தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் ஏர் சஞ்சிகை வெளியீடும் நிகழ்வும் பாடசாலை மண்டபத்தில் வெகு சிறப்பாக அதிபர் திரு.கி.சிவலிங்கராஜா தலைமையில் இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வினை அதிபர், ஆசிரியர் சமூகம், மாணவர்கள், கல்வி சாரா ஊழியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கம், பழைய மாணவர் சங்கம் என்பன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

அதிதிகள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு பாண்ட் வாத்திய இசையுடன் ஊர்வலமாக பாடசாலை வளாகத்தினுள் அழைத்து வரப்பட்டனர்.

தேசிய கொடி,பாடசாலை கொடியேற்றலுடன் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

மங்கள விளக்கேற்றலுடன் இந்து,கிறிஸ்த்தவ இறை வழிபாட்டுடன் நிகழ்வுகள் யாவும் நடைபெற்றன. மாணவர்களின் நடனம், குழுப்பாடல் என்பன காண்போரை கவர்ந்தன. சிறப்பு விருத்தினர்கள் உரையாற்றினார்கள். பிரதேசத்தின் மண் வாசனை கமளும் கலாச்சார பண்பாட்டு, விழுமியங்களை பிரதி பலித்துக் காட்டும் வகையில் ஆசிரியர்கள், மாணவருடைய ஆங்கங்கள் கொண்டதான 'ஏர்' சஞ்சிகை வெளியிட்டு வைக்கப்பட்டது. இதன் ஆய்வுரையினை ஒய்வு நிலைக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் அ.சுகுமாரன் தொகுத்து வழங்கினார்.

விளையாட்டு, கலை. பண்பாட்டு மாணவர்களின் பாட அடைவு, பல்கலைக் கழகத் தெரிவு போன்றவற்றில் ஆர்வம் செலுத்தி சித்தி பெற்ற மாணவர்கள் சான்றிதழ் வழங்கி கொளரவிக்கப்பட்டனர்.

இதேபோன்று பொறியியல், விஞ்ஞானம், கலை, வர்த்தக பிரிவுகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கு விஷ்ணு விருது வழங்கி பாராட்டப்பட்டனர். அத்துடன் நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகள் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வில் பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கலந்து கொண்டார். சிறப்பு அதிதியாக கல்குடா கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் ச.தட்சணாமூர்த்தி, விசேட அதிதிகளாக கிழக்கு பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் ப.இளங்கோ, வைத்தியர் இ.சிறிநாத் ஏறாவூர் பற்று பிரதேச சபையின் செயலாளர் வீ.பற்குணன்

ஆகியோர்களும் அழைப்பு அதிதிகளாக குறித்த பாடசாலையில் சேவையாற்றிச் சென்ற ஓய்வு நிலை அதிபர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :