தென்கிழக்கு பல்கலையில்; உபவேந்தர் கிண்ணம் பிரயோக விஞ்ஞான பீடம் வசமாகியது!லங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உத்தியோகத்தர்கள், (Staff Cricket Tournament 2023) உபவேந்தர் கிண்ணத்துக்காக 10 அணிகளாக பிரிந்து தொடராக இடம்பெற்ற சுற்றுப்போட்டிகளில் விளையாடி இறுதி சுற்றுக்கு பிரயோக விஞ்ஞான பீட “பல்கன்ஸ்” அணியும் தொழில்நுட்பவியல் பீட அணியும் தெரிவாகியிருந்தனர்.

இன்று (2024.03.07) மிகவும் விறுவிறுப்பான நிலையில் இடம்பெற்ற 10 ஓவர்களைக் கொண்ட போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பிரயோக விஞ்ஞான பீட அணி ஐந்து விக்கட்டுகளை இழந்து 146 ஓட்டங்களை பெற்றிருந்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய . தொழில்நுட்பவியல் பீட அணி சகல விக்கட்டுகளையும் இழந்து 76 ஓட்டங்களை பெற்றது. இதன் அடிப்படையில் 70 மேலதிக ஓட்டங்களைப் பெற்று பிரயோக விஞ்ஞான பீட அணி 2023 கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது. 

தென்கிழக்கு பல்கலைக்கழக உடற்கல்வி பிரிவின் பதில் பணிப்பாளர் பேராசிரியர் ஏ.எல். அப்துல் றவூப் அவர்களது தலைமையில் பிரயோக விஞ்ஞான பீட உடற்கல்வி போதனாசிரியர் ஐ.எம். கடாபி அவர்களது நெறிப்படுத்தலிலும் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பதில் உபவேந்தரும் பொறியியல் பீட பீடாதியுமான பேராசிரியர் எம்.ஏ.எல். அப்துல் ஹலிம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு வெற்றிக் கிண்ணத்தை வழங்கி வைத்தார்.
போட்டியின் சிறந்த ஆட்ட நாயகனாகவும் சுற்றுப்போட்டியின் சிறந்த ஆட்ட நாயகனாகவும் பிரயோக விஞ்ஞான பீட அணியின் முன்னணி நாயகன் எஸ். ரொசாந் தெரிவு செய்யப்பட்டனர்.

நிகழ்வின்போது பீடாதிபதிகளான கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் அவர்களும் தொழில்நுட்பவியல் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத் அவர்களும் தென்கிழக்கு ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஏ.எம். சமீம், சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட விரிவுரையாளர்கள் நிறைவேற்றுதர உத்தியோகத்தர்கள் உடற்கல்வி பிரிவின் உத்தியோகத்தர்கள் கல்விசாரா உத்தியோகத்தர்கள் மாணவர்கள் என பலரும் பங்குகொண்டிருந்தனர்.
.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :