ஐகோனிக் யூத் ஸ்ரீலங்கா அமைப்பின் இளைஞர்களுக்கிடையிலான கிரிகட் சுற்றுப்போட்டிஅஸ்ஹர் இப்றாஹிம்-
க்கோனிக் ஸ்ரீலங்கா அமைப்பின் அக்கரைப்பற்று பிராந்தியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கிரிக்கட் சுற்றுப்போட்டியானது கடந்த அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியானது அமைப்பினுடைய ஸ்தாபக தலைவர் தில்ஷானின் வழிகாட்டலில், தவிசாளர் ஷிமாம் முஸ்தாக் தலைமையில், அக்கரைப்பற்று ஒருங்கிணைப்பாளர் ஹிமாத்தின் ஒருங்கிணைப்பில், அமைப்பினுடைய விளையாட்டுத்துறை ஒருங்கிணைப்பாளர் ஸம்ஹிமியின் மேற்பார்வையின் கீழ் இடம்பெற்றது.

16 அணிகள் பங்குபற்றிய இச்சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டிக்கு ரியல் மெட்றிக்ஸ் மற்றும் ரைசிங் ஸ்டார் அணிகள் தெரிவாகியிருந்ததோடு றியல் மெட்றிக்ஸ் அணியினர் இறுதிப் போட்டியில் வெற்றிபெற்று சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டனர்.

இச் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டிக்கு பிரதம அதிதிகளாக ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி முஹம்மட் நவாஸ் மற்றும் ஓய்வுபெற்ற அதிபர் ஏ.ஜி. அன்வர் ஆகியோரும், விசேட அதிதிகளாக அமைப்பினுடைய பொதுச் செயலாளர் அப்றத் அஹமட், ஆலோசனை சபை உறுப்பினர்களான இப்திகார் ஜியாஸ், றிஸ்வான் சாலிஹூ, அஷ்ரக் இஸ்மாயில் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :