ஸ்ரீல‌ங்கா ஜ‌ம்இய்ய‌துல் உல‌மா ச‌பையின் பெய‌ர் மாற்ற‌ம்.க‌ட‌ந்த‌ வ‌ருட‌ம் முபாற‌க் மௌல‌வி முப்தி த‌லைமையில் க‌ல்முனையில் ஸ்தாபிக்க‌ப்ப‌ட்ட‌ ஸ்ரீல‌ங்கா ஜ‌ம்இய்ய‌துல் உல‌மா ச‌பையின் பெய‌ர் இன்னொரு அமைப்பின்ன் பெய‌ரை ஒத்த‌து போல் இருப்ப‌தாக‌வும் இது ம‌க்க‌ள் ம‌த்தியில் பெய‌ர் ம‌ய‌க்க‌த்தை ஏற்ப‌டுத்துவ‌தாக‌வுள்ள‌தாலும் அப்பெய‌ரை மாற்றுவ‌து ந‌ல்ல‌து என்று அமைப்பை சேர்ந்த‌ ப‌ல‌ உல‌மாக்க‌ள் லோச‌னை கூறிய‌த‌ற்கிண‌ங்க‌ மேற்ப‌டி அமைப்பின் பெய‌ர் "ஸ்ரீல‌ங்கா ஜ‌மாஅத்துல் உல‌மா க‌வுன்சில்" என‌ மாற்ற‌ப்ப‌ட்டுள்ள‌தாக‌ ஸ்ரீல‌ங்கா ஜ‌மாஅத்துல் உல‌மா க‌வுன்சிலின் பொதுச்செய‌லாள‌ர் முஹ‌ம்ம‌த் ச‌தீக் முப்தி தெரிவித்துள்ளார்.

இந்த‌ அமைப்பு முஸ்லிம்க‌ளின் க‌லாசார‌ ம‌ற்றும் தொண்டு நிறுவ‌ன‌மாக‌ செய‌ற்ப‌டுவதுட‌ன் ச‌மூக‌த்தின் ஒற்றுமைக்காக‌வும் அத‌ன் ந‌ல‌ன்க‌ளுக்காக‌வும் பாடுப‌டுவ‌துட‌ன் நாட்டின‌தும் நாட்டின் அனைத்து இன‌ ம‌க்க‌ளின் ந‌ல‌ன்க‌ளுக்காக‌வும் பாடுபடும் என‌வும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :