சாய்ந்தமருது பொலிவேரியன் குடியேற்ற கிராமத்திற்கு செல்லும் பிரதான இரும்பு பாலம் பொதுமக்கள் பயணிக்க முடியாத நிலைக்கு துருப்பிடித்து ஓட்டை விழுந்துள்ளது.
சாய்ந்தமருதிலுள்ள எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயம், கலாச்சார மண்டபம், பொது விளையாட்டு மைதானம், சுகாதார வைத்திய நிலையம், ஹிஜ்ரா பள்ளிவாசல், குவாசி நீதிமன்றம், பெண்கள் அரபிக் கல்லூரி, கால்நடை அபிவிருத்தி நிலையம் போன்ற முக்கியமான இடங்களுக்கு செல்லும் மக்களும், வாகனங்களும் இப் பாலத்தையே பயன்படுத்த வேண்டியுள்ளது.
இப்பாலம் முற்றாக இறந்து அழிவதற்கு முன் இப்பாலத்தை திருத்தித் தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
0 comments :
Post a Comment