மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்தும் கல்முனை காணி பதிவகம்



பாறுக் ஷிஹான்-
லங்கையில் அதிகூடிய உறுதிகள் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை காணி பதிவகத்தில் 1500 பதிவு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவிற்கமைய 20 இலட்சம் விவசாயக் குடும்பங்களுக்கு முழு உரிமையுடைய காணி உறுதிப்பத்திரங்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இதற்கமைய பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் கீழ் இயங்கும் கல்முனை காணி பதிவகமும் மாவட்ட பதிவகத்திலும் இரவு பகல் பாராது உத்தியோகத்தர்கள் கடமையாற்றினர்.இலங்கையில் அதிகூடிய உறுதிகள் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை காணி பதிவகத்தில் 1500 பதிவு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை முதல் இரவு பகலாக செயற்படும் இப்பிரிவானது உருமய தேசிய நிகழ்ச்சித் திட்டத்தை துரித கதியில் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் உருமய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இவ்வருட வரவுசெலவுத் திட்டத்தில் இரண்டு பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட காணி அனுமதிப்பத்திரங்கள் அனைத்தும் காணி உறுதிப் பத்திரங்களாக மாற்றப்பட்டு அவற்றை பயன்டுத்திய விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

மக்கள் முன்வைக்கும் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்குவதற்கும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களை ஒருங்கிணைத்தல் மற்றும் வழிநடத்தல் பொறிமுறையை செயற்படுத்துவதற்காக ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் “உருமய ” தேசிய செயற்பாட்டு செயலகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மானியப் பத்திரங்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், பதிவு செய்வதற்கும் உருமய தேசிய செயற்பாட்டுச் செயலக அலுவலகத்தை 0114354600-1 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் மூலமோ அல்லது http://tinyurl.com/yb98yhey என்ற இலத்திரனியல் படிவத்தின் ஊடாகவோ தொடர்பு கொள்ளலாம்.

மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவிற்கமைய, “உரித்து” வேலைத்திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் (10,000) காணி உறுதிப் பத்திரங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

குறித்த காணி உறுதிப் பத்திரங்கள் தற்போதும் பிரதேச செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதென சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் செயலாளர் எச்.எம்.பீ.பீ. ஹேரத் தெரிவித்தார்

உரித்து’ வேலைத்திட்டத்தின் கீழ் முதற் கட்டமாக 10 ஆயிரம் காணி உறுதிப் பத்திரங்களை வழங்கி வைப்பதற்கான தேசிய நிகழ்வு ஜனாதிபதி ரணல் விக்ரமசிங்கவின் தலைமையில் பெப்ரவரி 05ஆம் திகதி ரங்கிரி தம்புள்ளை விளையாட்டரங்களில் இன்று நடைபெறுகிறது.

நிகழ்வில் பங்குபற்றும் 10,000 பேருக்கான போக்குவரத்து மற்றும் உணவு ஆகியவற்றை வழங்குவதற்கு அவசியமான நிதி மாவட்டச் செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு, அவர்கள் எவ்வித நெருக்கடியும் இன்றி நிகழ்வில் பங்கேற்பதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு மாவட்டச் செயலாளர்களுக்கு ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது.

“உரித்து” வேலைத்திட்டத்தின் கீழ் 20 இலட்சம் விவசாயக் குடும்பங்களுக்கு காணி உறுதிப் பத்திரங்கள் வழங்க அரசாங்கம் திட்டமிட்டிருப்பதோடு, அதற்காக வரவு செலவு திட்டத்திலும் 2 பில்லியன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி காணி கட்டளைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட காணி உறுதிகள் அனைத்தும் முழு உரிமையுள்ள காணிஉறுதிப் பத்திரங்களாக மாற்றப்படும்.

காலணித்துவ ஆட்சியில் வெளிநாட்டவர்கள் இலங்கையில் கையகப்படுத்திய காணிகளை விவசாய நடவடிக்கைகளுக்காக உள்நாட்டவர்களுக்கு அனுமதி பத்திரங்கள் ஊடாக வழங்கியிருந்தனர்.

இருப்பினும் 1935ஆம் ஆண்டில் காணி கட்டளைச் சட்டத்தின் ஊடாக உள்நாட்டவர்களுக்கு காணி உறுதிப் பத்திரங்களை வழங்குவதற்காக மற்றுமொரு அனுமதி பத்திர முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் கீழ் காணிகளில் விவசாயம் செய்வதற்கும் வீடுகளை நிர்மாணிப்பதற்குமான அனுமதிகள் வழங்கப்பட்டது.

















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :