"உரிமை" வேலைத்திட்டத்தில் அகில இலங்கை ரீதியாக சம்மாந்துறை மண் முதலிடம்" பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா பெருமிதம்...
சர்ஜுன் லாபீர்-
திமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணத்தில் உருவான உரிமை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் அரச காணிகளை நிபந்தனையற்ற ரீதியில் சுதந்திரமான முறையில் பூரண உரிமையாக அளிப்பு வழங்கும் நிகழ்வில் அகில இலங்கை ரீதியாக சம்மாந்துறை பிரதேசம் முதலிடம் பெற்றுள்ளதாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா தெரிவித்துள்ளார்.

சம்மாந்துறை பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நாட்டின் 76வது சுதந்திர தின நிகழ்வில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் எதிர்வரும் 05ம் திகதி அதாவது நாளை தம்புள்ளையில் நடைபெறவிருக்கும் உறுமய பூரண உறுதி அளிப்பு நிகழ்வில் சம்மாந்துறையில் இருந்து இலங்கையிலே ஆக கூடுதலாக( 711) பொதுமக்களுக்கு முதல் தடவையாக பூரண உறுதி அளிப்புகள் வழங்கப்படவுள்ளது. என்பது மிக மகிழ்ச்சியான செய்தியாகும்.

இது பிரதேச ரீதியாக அகில இலங்கை ரீதியில் ஆகக் கூடுதலான பூரண உறுதி அளிப்பாக காணப்படுகின்றது இத் திட்டத்தில் முதல் உறுதி அளிப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் உடங்கா-01 கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த எம்.டி குழந்தை உம்மா என்பவருக்கு வழங்கப்பட இருப்பதும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும்.

இதன் மூலமாக எமது சமூகத்திற்கும், குறிப்பாக சிறுபான்மை சமூகத்திற்கும் எடுத்துக் கொள்ள வேண்டிய விடயம் யாதெனில்
அரசாங்கம் மற்றும் அரச அதிகாரிகள் எமது சமூகத்திற்கான உரிமையை வழங்குவதற்கு தயார் நிலையில் இருக்கின்றார்கள் என்பதனை இந்த உறுமய பூரண அளிப்பு விடயத்தில் இருந்து தெளிவாக புலப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக முதன்முதலாக சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் இருந்து நில அளவை திணைக்களத்தின் ஊடாக "ஓ" வரைபடம் அனுப்பிவைக்கப்பட்டதனால் குறித்த பயனாளி முதன்முதலாக தெரிவு செய்யப்பட்டமைக்கான காரணமாக அமைகின்றது.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்

நமது நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து தொடந்தேர்ச்சையாக ஒவ்வொரு ஆண்டும் அதனுடைய அபிவிருத்தி மக்களுடைய சுய நிர்ணயம், சுதந்திரம் சமாதானம், சாந்தி என்றெல்லாம் பேசப்பட்ட காலம் நாம் எல்லோரும் அறிந்ததே. இருந்தாலும் எமது முன்னோர்கள், மூதாதையர்கள் சுதந்திரத்திற்கு முதல் இன, மத மற்றும் மொழி வேறுபாடுகளையும் தாண்டி ஒன்றாக நின்று இந்த சுதந்திரத்தை பெற்றுத் தந்தார்கள்.

குறிப்பாக காலனித்துவ ஆட்சிக் காலத்திலேயே எம் அனைவருக்கும் தெரியும் ஐரோப்பியர்களின் 450 வருட கால ஆட்சியிலும் அதற்கு முன்னர் உள்ள மன்னர் ஆட்சிக் காலத்திலும் எமது மக்களுக்காக சிந்தித்து செயலாற்றி உயிர்த் தியாகம் செய்தவர்களும் நம் சமூகத்த்தில் இருந்துள்ளார்கள். அதிலும் குறிப்பாக சம்மாந்துறையைச் சேர்ந்த ஈஸா முகாந்திரம் எனும் சுதந்திர போராளி, அவர் பிரித்தானிய ஆட்சிக் காலத்திலேயே அவர்களால் தேசத்துரோகி என்று கொலை செய்யப்பட்டவர். அவரோடு இணைந்து பலரும் இந்த சுதந்திர போராட்டத்திலே களம் இறங்கி பாடுபட்டு இருக்கின்றார்கள் எனவே அவர்களை இச் சந்தர்ப்பத்தில் நினைவு கூருகின்றோம்.

அதேபோல் 76வது சுதந்திரத்தை அர்த்த புஷ்டியாக மாற்றுவது நம் அனைவரினதும் கடமையாகும். குறிப்பாக அரசாங்கம் மரக்கன்றுகளை நட வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கின்றது. அதிலும் மூலிகைக் கன்றுகளை நடவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதமர் தலைமையில் அந்நிகழ்வு நடந்தேறி உள்ளது. எமது வெளிக்கள உத்தியோகத்தர்கள் தங்களுடைய வெளிக்கள நடவடிக்கைகளின் போது மேற்குறித்த வேலைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துமாறு வேண்டிக் கொள்ளுகின்றேன்.

இந் நிகழ்வில் ஜனாதிபதியின் விசேட பணிப்புரையின் கீழ் மர நடுகை நிகழ்வு இடம்பெற்றது.

மேலும், எமது நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த படைவீரர்கள் மற்றும் ஏனையவர்களுக்காகவும் 2 நிமிட மெளன பிரார்த்தனையும் இடம்பெற்றது.

மேலும், இந் நிகழ்வுக்கு உதவி பிரதேச செயலக செயலாளர் யூ.எம் அஸ்லம்,கணக்காளர் ஐ.எம் பாரிஸ், உதவி திட்டமிடல் பணிப்பாளர் கலாநிதி ஏ.எல்.எம்.அஸ்லம்,நிர்வாக உத்தியோகத்தர் ஜே.எம் ஜெமில்,சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் யூ.எல்.எம் சலீம்,நிர்வாக கிராம சேவை உத்தியோகத்தர் எம்.எல்.எம் தாஸீம், மேலதிக மாவட்ட பதிவாளர் ஏ.கே.ரினோஸா, பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் எப்.சாஹீனா உம்மா உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :