கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பசும்பால் விற்பனை நிலையம்!



லங்கை, கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் நலன் கருதி 'ஆரோக்கியா பாலகம்' எனும் பெயரிலான பசும்பால் மற்றும் பால்சார் உற்பத்திகளின் விற்பனை நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

பல்கலைக்கழக பதிவாளர் அ.பகிரதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், உபவேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம் அவர்கள் விற்பனை நிலையத்தை திறந்து வைத்தார். கிழக்குப் பல்கலைக்கழக தொழிநுட்ப பீட பீடாதிபதி பேராசிரியர் த.மதிவேந்தன், கூட்டுறவுச் அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் கே.வி.தங்கவேல், பல்கலைக்கழக நிதியாளர் எம்.எம்.பாரிஸ், மாணவர் விவகாரங்கள் திணைக்கள சிரேஷ்ட உதவிப் பதிவாளர் எம்.எப்.எம்.மர்சூக் மற்றும் பல அதிகாரிகளின் பங்குபற்றலுடன் நிகழ்வு நடைபெற்றது.

பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஊழியர்களிடத்தில் தூய பசும்பால் அத்துடன் பால் உற்பத்திகளின் பயன்பாட்டை மேம்படுத்தும் நோக்கில், மட்டக்களப்பு கொம்மாதுறை கால்நடை அபிவிருத்தி, பால் சேகரிப்பு, கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கம் இவ்விற்பனை நிலையத்தை முன்னெடுத்துச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :