சாய்ந்தமருது அக்பர் பள்ளிவாசல் மையவாடியில் சிரமதான நிகழ்வு!"நிச்சயிக்கப்பட்ட வீட்டினை சுத்தம் செய்வோம்" என்ற தொனிப்பொருளில் சாய்ந்தமருது அக்பர் பள்ளிவாசல் மையவாடியில் சிரமதான நிகழ்வு ஒன்று இன்று 06-01-2024 காலை OG Society இனால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

இதற்கு OG Sports Club, Janaza Welfare People's Forum மற்றும் Nature Loving Forum என்பன ஒத்துழைப்பை வழங்கியிருந்தது. இம் மையவாடி மரங்கள் வளர்ந்து காணப்பட்டமையினால் ஜனாஸா அடக்குவதற்கு உகந்த நிலையில் காணப்படாமையினை கண்ணுற்ற OG Society அமைப்பினர் இதனை சுத்தம் செய்து ஜனாஸா அடக்குவதற்கு உகந்த மையவாடியாக மாற்றி உள்ளனர்.

இச்சமூகப்பணிக்கு ஒத்துழைப்பு வழங்கிய அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களுக்கும் மற்றும் JCB இயந்திரம், குப்பை அள்ளும் இயந்திரம் என்பவற்றை தந்து உதவிய கல்முனை மாநகர சபைக்கும் OG Society தனது நன்றிப் பூக்களையும் பிரார்த்தனைகளையும் மேற்கொள்கின்றது.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :