கிழக்கின் முதல் குழந்தை நல மருத்துவப்பேராசிரியரானார் வைத்திய நிபுணர் விஜி திருக்குமார்.வி.ரி. சகாதேவராஜா-
கிழக்கின் முதல் குழந்தை நல மருத்துவப்பேராசிரியராக கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட சிரேஸ்ட விரிவுரையாளரும், மட்.போதனா வைத்தியசாலையின் விசேட குழந்தை நல வைத்திய நிபுணருமான டாக்டர் விஜி திருக்குமார் தெரிவாகியுள்ளார்.

காரைதீவைச் சேர்ந்த வைத்திய கலாநிதி திருமதி விஜயகுமாரி திருக்குமார் கொழும்பு பல்கலைக்கழகம் லண்டன் றோயல் உயர் கல்லூரி என்பவற்றில் உயர் பட்டங்கள் பெற்றவர். MBBS DCH MD FRCPCH எனப் பல மருத்துவ சேவைகள் பட்டங்கள் பல பெற்ற இவர் குழந்தை நலன் தொடர்பாக பல மருத்துவ துறை கட்டுரைகளை எழுதி வருகிறார்.

வரலாற்றில் இவர் தான் கிழக்கில் முதலாவது குழந்தை நல மருத்துவப்பேராசிரியர் என்ற பெருமையை பெறுகிறார்.

இவரது துணைவர் வைத்திய கலாநிதி மார்க்கண்டு திருக்குமார் யாழ்.உரும்பிராயைச் சேர்ந்த மகப்பேற்று நிபுணராவார்.அவரும் கிழக்கு பல்கலைக்கழக மருத்துவத் துறை பேராசிரியராவார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :