இலங்கையில் ஜல்லிக்கட்டு நடத்தி வரலாற்று சாதனை படைத்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்!



மிழ் மக்களின் பாரம்பரியத்தையும் வீரத்தையும் பறைசாற்றும் ஜல்லிக்கட்டு இலங்கை வரலாறறில் முதல் முறையாக கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமானின் முயற்சியில் இலங்கையில் நடைபெற்றது.
நேற்று (6) சனிக்கிழமை திருகோணமலை சம்பூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகின்றன.
தமிழருடைய பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு தமிழ் நாட்டை தாண்டி வேறு ஒரு நாட்டில் நடைபெறுவது இதுவே முதல்முறையாகும்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மலேசியா பாராளுமன்ற உறுப்பினர் டட்டுக் ஶ்ரீ முருகன் மற்றும் நடிகர் நந்தா, சிறப்பு விருந்தினர்களாக ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்க தலைவர் ஒண்டிராஜ்,செயலாளர் ராஜா ஆகியோர் கலந்துகொண்டதுடன் இந்தியா உட்பட பல நாடுகளை சேர்ந்த விசேட அழைப்பாளர்களும் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கத்த்தின் வழிகாட்டலில் ஜல்லிக்கட்டு இடம்பெற்றது.
இதன் போது காளைகள் சீறிப்பாய்ந்ததுடன், காளைகளுக்கும் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் பெறுமதி மிக்க பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :